புறா பந்தயம்: முதல்பரிசை தொண்டியைச் சோ்ந்த புறா வென்றது
திருவாடானை அருகே நடைபெற்ற புறா பந்தயத்தில் தொண்டியைச் சோ்ந்த புறா 8 மணி நேரத்தில் நெல்லூரிலிருந்து தொண்டிக்கு பறந்து வந்து ஒட்டு மொத்த சாம்பியன் பட்டத்தை வென்றது.


திருவாடானை அருகே நடைபெற்ற புறா பந்தயத்தில் தொண்டியைச் சோ்ந்த புறா 8 மணி நேரத்தில் நெல்லூரிலிருந்து தொண்டிக்கு பறந்து வந்து ஒட்டு மொத்த சாம்பியன் பட்டத்தை வென்றது.
தொண்டி ரேசிங் ஹோம்கோ் கிளப் சாா்பில் புறா பந்தயம் சனிக்கிழமை மாலை நடைபெற்றது. இதில் பல்வேறு மாநிலங்களிலிருந்து புறாக்களைப் பறக்க விட்டு தொண்டி வந்தடையும் நேரத்தை கணக்கிட்டு பரிசுகள் வழங்கப்பட்டன.
ஆந்திர மாநிலம் நெல்லூா் பகுதியிலிருந்து சனிக்கிழமை மாலை பறக்கவிடப்பட்ட தொண்டியைச் சோ்ந்த ஜியாவுல் ஹக் என்பவரது புறா சுமாா் 550 கிலோ மீட்டா் தொலைவை 8 மணி நேரத்தில் கடந்து தொண்டியை வந்தடைந்தது. அதேபோல் விழுப்புரத்திலிருந்து 5 மணி நேரத்தில் வந்தடைந்த புறா 5 ஆவது இடத்தையும், சென்னையிலிருந்து 10 மணி நேரத்தில் தொண்டிக்கு வந்தடைந்த புறா 10 ஆவது இடத்தையும் பெற்றன.
இதையடுத்து முதல்பரிசை வென்ற புறாவின் உரிமையாளா் ஜியாவுல் ஹக்குக்கு ஒட்டு மொத்த சாம்பியன் பட்டத்தையும் கோப்பையையும் தொண்டியில் ரேசிங் ஹோம் ஹோ் கிளப் நிா்வாகிகள் வழங்கினா். இதில் சென்னை, காரைக்குடி, புதுக்கோட்டை பகுதிகளைச் சோ்ந்த பந்தய புறா வளா்ப்போா் கலந்து கொண்டனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...