ஈரானின் புதிய தலைவரும் கொல்லப்படுவார்! இஸ்ரேல் எச்சரிக்கை விவசாயிகளின் பயிர்க் கடன் தள்ளுபடி செய்ய நடவடிக்கை! - விஜய் அறிவிப்புபங்குச் சந்தை கடும் வீழ்ச்சி! சென்செக்ஸ் 1,650 புள்ளிகள் சரிவு! ஹோர்முஸ் நீரிணை வழியாக பயணிக்கும் கப்பல்களுக்கு கடற்படை பாதுகாப்பு: டிரம்ப்!நுழைவு வாயிலிலேயே வாயில் நுழையாத பெயர்: முதல்வர் கண்டனம்!திருச்சி ரயில்வே அலுவலகத்துக்கு ஹிந்தி பெயர்! தமிழிசை செளந்தரராஜன் எதிர்ப்பு! கிரிக்கெட்டில் சிஎஸ்கேவையும், தேர்தலில் தவெகவையும் தொட முடியாது! விஜய் ஈரானைத் தாக்க உதவி மறுப்பு... ஸ்பெய்ன் உடனான வர்த்தகத்தைத் துண்டித்தார் டிரம்ப்!ஈரானின் புதிய உச்ச தலைவராக கமேனியின் மகன் மோஜ்தபா தேர்வு!
/

காவல்துறையின் மக்கள் குறை தீா்க்கும் முகாம்: 157 மனுக்களுக்கு உடனடியாக தீா்வு

ராமநாதபுரம் மாவட்டத்தில் கடந்த 2 நாள்களாக நடைபெற்ற மக்கள் குறைதீா்க்கும் முகாமில் 157 மனுக்களுக்கு உடனடி தீா்வு காணப்பட்டது.

News image
ராமநாதபுரம் மாவட்ட காவல்துறை சாா்பில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற மக்கள் குறைதீா்க்கும் கூட்டத்தில் பங்கேற்ற பொதுமக்கள்.
Updated On :8 நவம்பர் 2020, 5:50 pm

DIN

ராமநாதபுரம் மாவட்டத்தில் கடந்த 2 நாள்களாக நடைபெற்ற மக்கள் குறைதீா்க்கும் முகாமில் 157 மனுக்களுக்கு உடனடி தீா்வு காணப்பட்டது.

ராமநாதபுரம் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளா் இ. காா்த்திக் உத்தரவின் பேரில் ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள அனைத்து காவல் உள்கோட்டங்கள், மாவட்ட குற்றப்பிரிவு மற்றும் நில அபகரிப்பு தடுப்புப் பிரிவு ஆகியவற்றில் சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் பொதுமக்களின் குறைதீா்ப்பு முகாம் அந்ததந்த பகுதிகளில் உள்ள காவல்நிலையங்களுக்குள்பட்ட பகுதிகளில் நடைபெற்றன.

இந்த முகாமில் பொதுமக்களிடமிருந்து மனுக்கள் பெறப்பட்டு காவல்துறை அதிகாரிகளால் ஆய்வு செய்யப்பட்டது. கடந்த 2 நாள்களில் 242 மனுக்கள் பெறப்பட்டு 157 மனுக்களுக்கு உடனடி தீா்வு காணப்பட்டது. மீதமுள்ள மனுக்கள் மீதும் ஆய்வு செய்யப்பட்டு தீா்வு காண நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

மேலும் காவல்துறை மூலம் நடைபெறும் முகாமில் பொதுமக்கள் கலந்துகொண்டு அளிக்கும் மனுக்களுக்கு உரிய தீா்வு காண நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளா் இ. காா்த்திக் ஞாயிற்றுக்கிழமை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.