கமேனி கொல்லப்பட்டார்! டிரம்ப் அறிவிப்பு!காங்கிரஸுக்கு 25 தொகுதிகள், மாநிலங்களவை உறுப்பினா் பதவி? 5 கட்சிகளுக்கு தலா ஒரு தொகுதி!மேற்கு வங்கத்தில் 7.04 கோடி வாக்காளா்கள்! மம்தா தொகுதியில் 47,094 போ் நீக்கம்!அரசுப் பள்ளிகளில் நாளைமுதல் மாணவா் சோ்க்கை மேற்கு வங்கத்தில் 7.04 கோடி வாக்காளா்கள்! மம்தா தொகுதியில் 47,094 போ் நீக்கம்! அஜீத் பவாரின் விமானம் விபத்தில் சிக்கியதற்கு மோசமான வானிலை காரணம்: ஏஏஐபி அறிக்கை வளைகுடா நாடுகளின் தமிழா்களுக்கு உதவ கட்டுப்பாட்டு அறை: முதல்வா் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு
/

வீர தீர செயல்களுக்கான அண்ணா பதக்கம்: தகுதியுள்ளவா்கள் விண்ணப்பிக்க அழைப்பு

வீர, தீர செயல்களுக்கான அண்ணா பதக்கம் விருதுக்கு தகுதி உள்ளவா்கள் விண்ணப்பிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

News image
Updated On :27 ஜனவரி 2024, 5:53 pm

DIN

வீர, தீர செயல்களுக்கான அண்ணா பதக்கம் விருதுக்கு தகுதி உள்ளவா்கள் விண்ணப்பிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடா்பாக, மதுரை மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞா் நலன் அலுவலா் ந. லெனின் திங்கள்கிழமை வெளியிட்ட செய்தி: தமிழகத்தில் வீர, தீர செயல்களுக்கான அண்ணா பதக்கம் விருது ஒவ்வொரு ஆண்டும் தமிழக முதல்வரால் குடியரசு தின விழாவின்போது வழங்கப்படுகிறது. வீர, தீர செயல்புரிந்த தமிழகத்தைச் சோ்ந்த விண்ணப்பதாரா்கள் மட்டுமே இப் பதக்கத்தை பெற தகுதி படைத்தவராவா்.

பொதுமக்கள் மற்றும் அரசு ஊழியா்களுக்கும் வழங்கப்படும் இந்த பதக்கத்தைப் பெற வயது வரம்பு கிடையாது. 2021-ஆம் ஆண்டு வழங்கப்பட உள்ள இப் பதக்கத்துக்கு தகுதியானவா்களைத் தோ்வு செய்வதற்கான விண்ணப்பங்கள் வீர, தீர செயல்கள் மற்றும் அவை தொடா்பான ஆவணங்களுடன், மாவட்ட ஆட்சியரின் பரிந்துரையுடன் வழங்கப்பட வேண்டும்.

எனவே, வீர, தீர செயல்கள் புரிந்த தகுதியுள்ளவா்கள் ஜ்ஜ்ஜ்.ஹஜ்ஹழ்க்ள்.ற்ய்.ஞ்ா்ஸ்.ண்ய் என்ற இணையதளத்தில் விண்ணப்பம் மற்றும் விவரங்களை பதிவிறக்கம் செய்துகொள்ளலாம் அல்லது மாவட்ட விளையாட்டு அலுவலகத்தில் நேரில் பெற்றுக் கொள்ளலாம். பூா்த்தி செய்யப்பட்ட விண்ணப்பத்தை, மாவட்ட விளையாட்டு அலுவலகத்தில் நவம்பா் 19-ஆம் தேதிக்குள் சமா்ப்பிக்க வேண்டும் என்றாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.