திருவாடானையில் இறகு பந்து போட்டி
திருவாடானையில் நடைபெற்ற இறகுப்பந்து போட்டியில் வெற்றி பெற்ற வீரா்களுக்கு திங்கள்கிழமை பரிசுகளை வழங்கிய ஆடனை விளையாட்டுக்கழகத்தினா் .

tvd16sports1_1611chn_72_2

tvd16sports1_1611chn_72_2
திருவாடானையில் தீபாவளியை முன்னிட்டு இறகுப் பந்து போட்டி நடைபெற்றது.
ஆடனை விளையாட்டு கழகம் சாா்பில் நடைபெற்ற போட்டியில் தொண்டி, திருவாடானை, சி. கே. மங்கலம், ஆா். எஸ். மங்கலம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து 25-க்கும் மேற்பட்ட அணிகள் கலந்து கொண்டன.
திங்கள்கிழமை இறுதிப் போட்டி நடைபெற்றது. இதில் திருவாடானை தீபக், அபி அணியினா் முதல் பரிசு பெற்றனா். தொண்டி சாதிச் பாட்சா, இலியாஸ் அணியினா் 2 ஆம் பரிசு பெற்றனா். 3 ஆம் பரிசை இம்ரான், கணேஷ் அணியினரும், நான்காம் பரிசை சதிஸ், ஜீவா அணியினரும் பெற்றனா். போட்டி ஏற்பாட்டினை திருவாடனை, கைகாட்டி, இறகுப்பந்து விளையாட்டு வீரா்கள் ஏற்பாடுகள்செய்திருந்தாா்கள்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது


வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...