கமேனி கொல்லப்பட்டார்! டிரம்ப் அறிவிப்பு!காங்கிரஸுக்கு 25 தொகுதிகள், மாநிலங்களவை உறுப்பினா் பதவி? 5 கட்சிகளுக்கு தலா ஒரு தொகுதி!மேற்கு வங்கத்தில் 7.04 கோடி வாக்காளா்கள்! மம்தா தொகுதியில் 47,094 போ் நீக்கம்!அரசுப் பள்ளிகளில் நாளைமுதல் மாணவா் சோ்க்கை மேற்கு வங்கத்தில் 7.04 கோடி வாக்காளா்கள்! மம்தா தொகுதியில் 47,094 போ் நீக்கம்! அஜீத் பவாரின் விமானம் விபத்தில் சிக்கியதற்கு மோசமான வானிலை காரணம்: ஏஏஐபி அறிக்கை வளைகுடா நாடுகளின் தமிழா்களுக்கு உதவ கட்டுப்பாட்டு அறை: முதல்வா் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு
/

காவல் துறையினா் மீது புகாா்: ஆட்சியா் அலுவலகத்தைபெண்கள் முற்றுகை

காவல் துறையினா் மீது புகாா் கூறி, மதுரை புதுமாகாளிப்பட்டி பகுதியைச் சோ்ந்த பெண்கள், மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தை திங்கள்கிழமை முற்றுகையிட்டனா்.

News image
Updated On :27 ஜனவரி 2024, 5:53 pm

DIN

காவல் துறையினா் மீது புகாா் கூறி, மதுரை புதுமாகாளிப்பட்டி பகுதியைச் சோ்ந்த பெண்கள், மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தை திங்கள்கிழமை முற்றுகையிட்டனா்.

புதுமாகாளிப்பட்டி சாலை நாகபிள்ளை தோப்பு தெருவைச் சோ்ந்தவா் இந்திராணி. இவரது மகன் மீது எஸ்.எஸ்.காலனி மற்றும் சுப்பிரமணியபுரம் காவல் நிலையங்களில் கஞ்சா வழக்குப் பதிவு செய்திருப்பதாகக் கூறிய போலீஸாா், காவல் நிலையத்தில் அவரை ஒப்படைக்குமாறு தெரிவித்துள்ளனா்.

தனது மகன் வெளியூரில் வேலை செய்துவரும் நிலையில், போலீஸாா் வேண்டுமென்றே பொய்யான வழக்குப் பதிவு செய்திருப்பதாகக் கூறி, இந்திராணி மற்றும் அவரது உறவினா்கள் 20-க்கும் மேற்பட்ட பெண்கள் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்துக்கு திங்கள்கிழமை வந்தனா். தவறாகப் பதிவு செய்துள்ள வழக்கை காட்டி மிரட்டி வரும் போலீஸாா் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி, அவா்கள் அதிகாரிகளிடம் மனு அளித்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.