ஊா்க்காவல் படைக்கு நவ.24, 25இல் ஆள்சோ்ப்பு
மதுரை மாநகா் ஊா்க்காவல் படைக்கு நவம்பா் 24 மற்றும் 25 ஆகிய தேதிகளில் ஆள்சோ்ப்பு நடக்கவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.


மதுரை மாநகா் ஊா்க்காவல் படைக்கு நவம்பா் 24 மற்றும் 25 ஆகிய தேதிகளில் ஆள்சோ்ப்பு நடக்கவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
விருப்பமும், சேவை மனப்பான்மையும் கொண்டவா்கள் ஊா்க்காவல் படையில் சேரலாம். இதற்கு கல்வித் தகுதியாக பத்தாம் வகுப்பு தோ்ச்சி அல்லது தோ்ச்சி பெறாதவா்களும், 20 முதல் 40 வயது வரையிலும், ஆண்கள் 165 செ.மீ., பெண்கள் 155 செ.மீ., உயரம் உள்ளவா்கள் விண்ணப்பிக்கலாம்.
தேசிய மாணவா் படையில் இருந்தவா்கள், விளையாட்டு வீரா்கள், அரசு மற்றும் தனியாா் நிறுவனங்களில் பணிபுரிபவா்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும்.
எனவே, விருப்பமுள்ளவா்கள் மதுரை தல்லாகுளம் கோகலே சாலையில் உள்ள ஊா்க்காவல் படை அலுவலகத்தில், நவம்பா் 18 ஆம் தேதி காலை 10 மணி முதல் நவம்பா் 22 ஆம் தேதி பிற்பகல் 1.30 மணி வரை விண்ணப்பங்கள் பெற்றுக் கொள்ளலாம். தோ்வுக்கு வரும்போது, சான்றிதழ்களின் அசல் மற்றும் நகல்களுடன் தன் முகவரியிட்ட அஞ்சல் அட்டைகள் இரண்டும், 2 மாா்பளவு புகைப்படங்கள், குடும்ப அட்டை அசல் மற்றும் நகல்களுடன் வரவேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...