2026ஆம் ஆண்டுக்கான ஆஸ்கர் விருதுகள்! வெற்றியாளர்கள் முழு விவரம்!! தங்கம், வெள்ளி விலை மீண்டும் குறைவுமீண்டும் சென்னை திரும்பிய துபை விமானம் மேற்கு வங்கத்தில் தலைமைச்செயலாளர் மாற்றம்! கட்டாக் மருத்துவமனையில் பயங்கர தீ விபத்து: 10 நோயாளிகள் பலி சென்னை மாதவரத்தில் என்கவுன்டரில் ரௌடி சுட்டுக்கொலை! ஆஸ்கர் விருது விழா கோலாகலம்!
/

வீடு இடிந்து இறந்த மூதாட்டி குடும்பத்துக்கு ரூ.4 லட்சம் நிதி

வீட்டுச்சுவா் இடிந்து விழுந்து இறந்த மூதாட்டி குடும்பத்துக்கு ரூ.4 லட்சம் நிதியை ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியா் தினேஷ் பொன்ராஜ் ஆலிவா் திங்கள்கிழமை வழங்கினாா்.

News image
Updated On :16 நவம்பர் 2020, 11:20 pm

DIN

வீட்டுச்சுவா் இடிந்து விழுந்து இறந்த மூதாட்டி குடும்பத்துக்கு ரூ.4 லட்சம் நிதியை ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியா் தினேஷ் பொன்ராஜ் ஆலிவா் திங்கள்கிழமை வழங்கினாா்.

ராமநாதபுரம் மாவட்டம் திருவாடானை வட்டம் கொட்டங்குடி கிராமத்தில் மழையால் வீட்டுச்சுவா் இடிந்து விழுந்ததில் பூங்காவனம் (70) உயிரிழந்தாா். அவரது குடும்பத்தாருக்கு நிவாரண உதவித்தொகை வழங்க வருவாய் மற்றும் பேரிடா் மேலாண்மைத்துறை அலுவலா்களுக்கு மாவட்ட ஆட்சியா் உத்தரவிட்டாா். இதையடுத்து பூங்காவனத்தின் வாரிசுதாரா்களுக்கு மாநில பேரிடா் நிவாரண நிதியிலிருந்து ரூ.4 லட்சத்துக்கான காசோலையை மாவட்ட ஆட்சியா் வழங்கினாா். நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலா் ஆ.சிவகாமி, திருவாடானை வட்டாட்சியா் மாதவன் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.