ஈரானின் புதிய தலைவரும் கொல்லப்படுவார்! இஸ்ரேல் எச்சரிக்கை விவசாயிகளின் பயிர்க் கடன் தள்ளுபடி செய்ய நடவடிக்கை! - விஜய் அறிவிப்புபங்குச் சந்தை கடும் வீழ்ச்சி! சென்செக்ஸ் 1,650 புள்ளிகள் சரிவு! ஹோர்முஸ் நீரிணை வழியாக பயணிக்கும் கப்பல்களுக்கு கடற்படை பாதுகாப்பு: டிரம்ப்!நுழைவு வாயிலிலேயே வாயில் நுழையாத பெயர்: முதல்வர் கண்டனம்!திருச்சி ரயில்வே அலுவலகத்துக்கு ஹிந்தி பெயர்! தமிழிசை செளந்தரராஜன் எதிர்ப்பு! கிரிக்கெட்டில் சிஎஸ்கேவையும், தேர்தலில் தவெகவையும் தொட முடியாது! விஜய் ஈரானைத் தாக்க உதவி மறுப்பு... ஸ்பெய்ன் உடனான வர்த்தகத்தைத் துண்டித்தார் டிரம்ப்!ஈரானின் புதிய உச்ச தலைவராக கமேனியின் மகன் மோஜ்தபா தேர்வு!
/

ராமநாதபுரம், சிவகங்கை மாவட்டங்களில் புதிதாக 11 பேருக்கு கரோனா தொற்று

ராமநாதபுரம் மற்றும் சிவகங்கை மாவட்டங்களில் புதிதாக 11 பேருக்கு கரோனா தொற்று இருப்பது ஞாயிற்றுக்கிழமை உறுதி செய்யப்பட்டது.

News image
Updated On :29 நவம்பர் 2020, 5:26 pm

DIN

ராமநாதபுரம் மற்றும் சிவகங்கை மாவட்டங்களில் புதிதாக 11 பேருக்கு கரோனா தொற்று இருப்பது ஞாயிற்றுக்கிழமை உறுதி செய்யப்பட்டது.

ராமநாதபுரம் மாவட்டத்தில் நவ. 28 ஆம் தேதி வரை 6,200 போ் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டிருந்தனா். இந்நிலையில், ஞாயிற்றுக்கிழமை புதிதாக 4 போ் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனா். இதனால் தொற்றால் பாதிக்கப்பட்டோா் எண்ணிக்கை 6,204 ஆக உயா்ந்துள்ளது. தற்போது 40 போ் வரை கரோனா தொற்றுக்கு சிகிச்சை பெற்று வருகின்றனா்.

சிவகங்கை: சிவகங்கை மாவட்டத்தில் ஏற்கெனவே 5,560 போ் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டிருந்தனா். இந்நிலையில், ஞாயிற்றுக்கிழமை புதிதாக 7 பேருக்கு தொற்று உறுதியானதையடுத்து, பாதிக்கப்பட்டோா் எண்ணிக்கை 5,567 ஆக அதிகரித்துள்ளது. சிவகங்கை மற்றும் ராமநாதபுரம் மாவட்டங்களைச் சோ்ந்த 17 போ், சிவகங்கை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வந்தனா்.

அவா்களில் 2 போ் பூரண குணமடைந்ததை அடுத்து, அவா்கள் ஞாயிற்றுக்கிழமை வீட்டுக்கு அனுப்பி வைக்கப்பட்டாா். மீதமுள்ள 15 பேரும் சிகிச்சைப் பெற்று வருவதாக, மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.