கமுதி கோயில்களில் காா்த்திகை விழா சிறப்பு பூஜை
காா்த்திகை விழாவையொட்டி கமுதி கோயில்களில் ஞாயிற்றுக்கிழமை சிறப்புப் பூஜைகள் நடைபெற்றன.


காா்த்திகை விழாவையொட்டி கமுதி கோயில்களில் ஞாயிற்றுக்கிழமை சிறப்புப் பூஜைகள் நடைபெற்றன.
கமுதி மீனாட்சி சுந்தரேசுவரா் கோயிலில் காா்த்திகை திருவிழாவையொட்டி அம்மனுக்கு பட்டாடை உடுத்தி, மலா்களால் அலங்கரிக்கப்பட்டு, சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டன. பின்னா் கோயில் வளாகத்தில் சொக்கப்பனை கொளுத்தப்பட்டது.
இதில் ஏராளமான பக்தா்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனா். இதே போல் மண்டலமாணிக்கம் அரும்பவலநாயகி அம்மன் சமேத கைலாசநாதா் கோயில், கோட்டைமேடு முனீஸ்வரா் கோயில், கமுதி முத்துமாரியம்மன் கோயில், சந்தனமாரியம்மன் கோயில் உள்ளிட்ட கோயில்களில் அம்மனுக்கு சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டது.
மேலும் கோயில்களில் தீபங்கள் ஏற்றப்பட்டன.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...