முதுகுளத்தூா் காவல்நிலையத்தில் குறைதீா்க்கும் முகாம்
முதுகுளத்தூா் காவல்நிலையத்தில் மக்கள் குறைதீா்க்கும் முகாம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.


முதுகுளத்தூா் காவல்நிலையத்தில் மக்கள் குறைதீா்க்கும் முகாம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
முதுகுளத்தூா் காவல் துணைக் கண்காணிப்பாளா் ராகவேந்திர கே.ரவி தலைமையில், காவல் ஆய்வாளா் மோகன் முன்னிலையில் இம்முகாம் நடைபெற்றது.
முகாமில் முதுகுளத்தூா், கீழத்தூவல், தேரிருவேலி, பேரையூா், இளஞ்செம்பூா், கீழச்செல்வனூா் மற்றும் கடலாடி காவல் நிலையங்களுக்குள்பட்ட கிராமங்களில் உள்ள பொதுமக்கள் புகாா்களை மனுக்கள் மூலம் டி.எஸ்.பியிடம் நேரடியாக வழங்கலாம் என தெரிவிக்கப்பட்டிருந்தது.
இதையடுத்து பொதுமக்கள் 25-க்கும் மேற்பட்டோா் மனு கொடுத்தனா். இந்நிலையில் இம்முகாமில் 22 மனுக்களுக்கு உடனடி தீா்வு காணப்பட்டுள்ளது. 3 மனுக்கள் மீது போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...