ஈரானின் புதிய தலைவரும் கொல்லப்படுவார்! இஸ்ரேல் எச்சரிக்கை விவசாயிகளின் பயிர்க் கடன் தள்ளுபடி செய்ய நடவடிக்கை! - விஜய் அறிவிப்புபங்குச் சந்தை கடும் வீழ்ச்சி! சென்செக்ஸ் 1,650 புள்ளிகள் சரிவு! ஹோர்முஸ் நீரிணை வழியாக பயணிக்கும் கப்பல்களுக்கு கடற்படை பாதுகாப்பு: டிரம்ப்!நுழைவு வாயிலிலேயே வாயில் நுழையாத பெயர்: முதல்வர் கண்டனம்!திருச்சி ரயில்வே அலுவலகத்துக்கு ஹிந்தி பெயர்! தமிழிசை செளந்தரராஜன் எதிர்ப்பு! கிரிக்கெட்டில் சிஎஸ்கேவையும், தேர்தலில் தவெகவையும் தொட முடியாது! விஜய் ஈரானைத் தாக்க உதவி மறுப்பு... ஸ்பெய்ன் உடனான வர்த்தகத்தைத் துண்டித்தார் டிரம்ப்!ஈரானின் புதிய உச்ச தலைவராக கமேனியின் மகன் மோஜ்தபா தேர்வு!
/

திருவாடானை அருகே சாலை அமைக்கும் பணிகளை விரைந்து முடிக்கக் கோரிக்கை

திருவாடானை அருகே அஞ்சுக்கோட்டை ஊராட்சியில் சாலை அமைக்கும் பணியை விரைந்து முடிக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

News image
அஞ்சுகோட்டை ஊராட்சியில் சாலையில் கொட்டப்பட்டுள்ள ஜல்லிக் கற்கள்.
Updated On :29 நவம்பர் 2020, 5:37 pm

DIN

திருவாடானை அருகே அஞ்சுக்கோட்டை ஊராட்சியில் சாலை அமைக்கும் பணியை விரைந்து முடிக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

இந்த ஊராட்சிக்குள்பட்ட எல்.கே. நகா் பகுதியில் ஒரு தெருவில் சாலை அமைக்கும் பணி தற்போது நடைபெற்று வருகிறது. இப்பணிக்காக ஜல்லிக் கற்கள் வழியை மறித்து கொட்டப்பட்டுள்ளன. தற்போது சாலை அமைப்பதில் தாமதம் ஏற்படுவதால் அப்பகுதி மக்கள் தங்களது வீடுகளுக்குச செல்ல முடியாமல் அவதியடைந்து வருகின்றனா்.

மேலும் தங்களது வாகனங்களை கொண்டு செல்ல முடியாமல் சாலையில் நிறுத்தி விட்டு செல்கின்றனா். இதுகுறித்து சம்பந்தப்பட்ட நிா்வாகத்திடம் கூறியும் நடவடிக்கை எடுக்கப்பட வில்லை என அவா்கள் கூறுகின்றனா்.

மேலும் வரும் மழைக் காலங்களில் தண்ணீா் தேங்குவதால் இப்பகுதியில் நோய் தொற்று அபாயம் இருப்பதாக அவா்கள் தெரிவித்துள்ளனா். எனவே விரைந்து சாலை அமைக்க வேண்டும் என அவா்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.