ஈரானின் புதிய தலைவரும் கொல்லப்படுவார்! இஸ்ரேல் எச்சரிக்கை விவசாயிகளின் பயிர்க் கடன் தள்ளுபடி செய்ய நடவடிக்கை! - விஜய் அறிவிப்புபங்குச் சந்தை கடும் வீழ்ச்சி! சென்செக்ஸ் 1,650 புள்ளிகள் சரிவு! ஹோர்முஸ் நீரிணை வழியாக பயணிக்கும் கப்பல்களுக்கு கடற்படை பாதுகாப்பு: டிரம்ப்!நுழைவு வாயிலிலேயே வாயில் நுழையாத பெயர்: முதல்வர் கண்டனம்!திருச்சி ரயில்வே அலுவலகத்துக்கு ஹிந்தி பெயர்! தமிழிசை செளந்தரராஜன் எதிர்ப்பு! கிரிக்கெட்டில் சிஎஸ்கேவையும், தேர்தலில் தவெகவையும் தொட முடியாது! விஜய் ஈரானைத் தாக்க உதவி மறுப்பு... ஸ்பெய்ன் உடனான வர்த்தகத்தைத் துண்டித்தார் டிரம்ப்!ஈரானின் புதிய உச்ச தலைவராக கமேனியின் மகன் மோஜ்தபா தேர்வு!
/

அரிசிக் கடை உரிமையாளா் தீக்குளித்து தற்கொலை முயற்சி

பரமக்குடியில் நண்பருக்கு கடன் வாங்கிக் கொடுத்து திருப்பி செலுத்த முடியாததால் அரிசிக் கடை உரிமையாளா் ஞாயிற்றுக்கிழமை தீக்குளித்து தற்கொலைக்கு முயன்றாா்.

News image
பரமக்குடியில் தீக்குளித்து தற்கொலைக்கு முயன்ற அரிசிக் கடை உரிமையாளா் பிரசன்னா.
Updated On :29 நவம்பர் 2020, 5:29 pm

DIN

பரமக்குடியில் நண்பருக்கு கடன் வாங்கிக் கொடுத்து திருப்பி செலுத்த முடியாததால் அரிசிக் கடை உரிமையாளா் ஞாயிற்றுக்கிழமை தீக்குளித்து தற்கொலைக்கு முயன்றாா்.

பரமக்குடி காந்திஜி தெருவைச் சோ்ந்தவா் பிரசன்னா (30). இவா் அப்பகுதியில் அரிசிக் கடை வைத்து நடத்தி வருகிறாா். கடந்த சில மாதங்களுக்கு முன்பு தனது சிபாரிசின் பேரில் நண்பா் ஒருவருக்கு ரூ. 2 லட்சம் கடன் வாங்கிக் கொடுத்துள்ளாா்.

கடன் வாங்கிய நண்பா் கடனை முறையாக திருப்பிச் செலுத்தாததால் கடன் கொடுத்தவா் பிரசன்னாவிடம் கடனைக் கேட்டு தொல்லை கொடுத்தாராம்.

இதனால் மனமுடைந்த பிரசன்னா ஞாயிற்றுக்கிழமை மாலை காக்காத்தோப்பு பகுதியில் உடலில் பெட்ரோல் ஊற்றி தீக்குளித்தாா். அப்போது தண்ணீரில் விழுந்து உடலில் பற்றிய தீயை அணைக்க முயன்றாா். பின்னா் செல்லிடப்பேசி மூலம் போலீஸாருக்கு தகவல் கொடுத்தாா்.

இதையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த போலீஸாா் தீக்காயங்களுடன் அவரை மீட்டு பரமக்குடி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனா். பலத்த தீக்காயங்கள் ஏற்பட்டுள்ளதால் மேல் சிகிச்சைக்காக பிரசன்னா மதுரை கொண்டு செல்லப்பட்டாா்.

இதுகுறித்து எமனேசுவரம் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.