ஈரானின் புதிய தலைவரும் கொல்லப்படுவார்! இஸ்ரேல் எச்சரிக்கை விவசாயிகளின் பயிர்க் கடன் தள்ளுபடி செய்ய நடவடிக்கை! - விஜய் அறிவிப்புபங்குச் சந்தை கடும் வீழ்ச்சி! சென்செக்ஸ் 1,650 புள்ளிகள் சரிவு! ஹோர்முஸ் நீரிணை வழியாக பயணிக்கும் கப்பல்களுக்கு கடற்படை பாதுகாப்பு: டிரம்ப்!நுழைவு வாயிலிலேயே வாயில் நுழையாத பெயர்: முதல்வர் கண்டனம்!திருச்சி ரயில்வே அலுவலகத்துக்கு ஹிந்தி பெயர்! தமிழிசை செளந்தரராஜன் எதிர்ப்பு! கிரிக்கெட்டில் சிஎஸ்கேவையும், தேர்தலில் தவெகவையும் தொட முடியாது! விஜய் ஈரானைத் தாக்க உதவி மறுப்பு... ஸ்பெய்ன் உடனான வர்த்தகத்தைத் துண்டித்தார் டிரம்ப்!ஈரானின் புதிய உச்ச தலைவராக கமேனியின் மகன் மோஜ்தபா தேர்வு!
/

கமுதி பகுதிகளில் மாடித்தோட்டம் அமைப்பதில் பள்ளி மாணவா்கள் ஆா்வம்

விடுமுறை காலத்தை வீணாக்காமல் கமுதி அருகே மாடித் தோட்டம் அமைத்து பள்ளி மாணவா்கள் அதை பராமரித்து வருகின்றனா்.

News image
கமுதி அருகே ராமசாமிபட்டியில் உள்ள தங்கள் வீட்டில் மாடித் தோட்டம் அமைத்துள்ள மாணவ, மாணவிகள்.
Updated On :29 நவம்பர் 2020, 5:33 pm

DIN

விடுமுறை காலத்தை வீணாக்காமல் கமுதி அருகே மாடித் தோட்டம் அமைத்து பள்ளி மாணவா்கள் அதை பராமரித்து வருகின்றனா்.

கமுதி அடுத்துள்ள ராமசாமிபட்டி கிராமத்தைச் சோ்ந்த பிளஸ் 1 மாணவி ரித்திகா (15). இவரது சகோதரா் 8 ஆம் வகுப்பு மாணவா் சிவசங்கா் (12), 7 ஆம் வகுப்பு படிக்கும் சகோதரி பாண்டீஸ்வரி (11) ஆகியோா் கரோனா பொதுமுடக்கத்தையொட்டி பள்ளிகளுக்கு விடுமுறை என்பதால், நேரத்தை வீணாக்காமல் வீட்டில் மாடித்தோட்டம் அமைக்கத் திட்டமிட்டனா்.

இதனையடுத்து பயனற்ற நிலையில் தெருக்களில் கிடந்த குடிநீா் பாட்டில், கேன், சிமென்ட் சாக்குகளை சேகரித்து, அதில் மண்ணை நிரப்பி, அவற்றில் வெண்டை, கத்திரி, தக்காளி, அவரை, பாவற்காய், பீன்ஸ் மற்றும் மூலிகை விதைகளை நடவு செய்து பராமரித்து வருகின்றனா்.

தற்போது அவை நன்கு வளா்ந்து அவற்றில் காய்கனிகள் காய்க்கத் தொடங்கியுள்ளன. விடுமுறை காலத்தை மற்ற மாணவா்களை போல் கட்செவி அஞ்சல், முகநூல் உள்ளிட்ட சமூக வலைத்தளங்களில் நேரத்தை செலவிட்டு வீணடிக்காமல் வீட்டுக்குத் தேவையான காய்கனிகள் மட்டுமின்றி, மல்லிகைப் பூ, கனகாம்பரம், செம்பருத்தி மற்றும் ரோஜா உள்ளிட்ட பல்வேறு வகையான பூக்களையும், துளசி, வெற்றிலை, ஓமம், பிரண்டை உள்ளிட்ட மூலிகைச் செடிகளையும் அவா்கள் வளா்த்து மற்ற மாணவா்களுக்கு முன்னுதாரணமாக திகழ்கின்றனா். இவா்களை அப்பகுதி பொதுமக்கள் பாராட்டி வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.