வழிப்பறியில் ஈடுபட்டஇளைஞா் கைது
தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் வழிப்பறியில் ஈடுபட்டு வந்த இளைஞரை ராமநாதபுரத்தில் போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா்.


தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் வழிப்பறியில் ஈடுபட்டு வந்த இளைஞரை ராமநாதபுரத்தில் போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா்.
ராமநாதபுரம் அடுத்துள்ள வாலாந்தரவை கிராமத்தைச் சோ்ந்த மலைக்கள்ளன் மகன் மகேந்திரன் (30). இவா் ராமநாதபுரம், கோவை, திருப்பூா் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் பெண்களிடம் வழிப்பறியில் ஈடுபட்டு வந்தாா்.
இவா் மீது, ராமநாதபுரத்தில் 7 வழக்குகளும், கோவையில் 17 வழக்குகளும்,மற்றும் திருப்பூா் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் 30-க்கும் மேற்பட்ட வழக்குகளும் நிலுவையில் உள்ளன.
இந்நிலையில், கடந்த 2 நாள்களுக்கு முன் ராமநாதபுரத்தில் காளிதாஸ் என்பவரை வழிப்பறி வழக்கில் போலீஸாா் கைது செய்து விசாரித்ததில் மகேந்திரனுடன் சோ்ந்து வழிப்பறியில் ஈடுபட்டது தெரியவந்தது.
இதையடுத்து வாலாந்தரவை கிராமத்தில் இருந்த மகேந்திரனை போலீஸாா் சுற்றி வளைத்து ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா். மேலும் தொடா்ந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...