ஈரானின் புதிய தலைவரும் கொல்லப்படுவார்! இஸ்ரேல் எச்சரிக்கை விவசாயிகளின் பயிர்க் கடன் தள்ளுபடி செய்ய நடவடிக்கை! - விஜய் அறிவிப்புபங்குச் சந்தை கடும் வீழ்ச்சி! சென்செக்ஸ் 1,650 புள்ளிகள் சரிவு! ஹோர்முஸ் நீரிணை வழியாக பயணிக்கும் கப்பல்களுக்கு கடற்படை பாதுகாப்பு: டிரம்ப்!நுழைவு வாயிலிலேயே வாயில் நுழையாத பெயர்: முதல்வர் கண்டனம்!திருச்சி ரயில்வே அலுவலகத்துக்கு ஹிந்தி பெயர்! தமிழிசை செளந்தரராஜன் எதிர்ப்பு! கிரிக்கெட்டில் சிஎஸ்கேவையும், தேர்தலில் தவெகவையும் தொட முடியாது! விஜய் ஈரானைத் தாக்க உதவி மறுப்பு... ஸ்பெய்ன் உடனான வர்த்தகத்தைத் துண்டித்தார் டிரம்ப்!ஈரானின் புதிய உச்ச தலைவராக கமேனியின் மகன் மோஜ்தபா தேர்வு!
/

இமானுவேல் சேகரன் நினைவு தினத்தில் விதிமீறல்: மேலும் 36 போ் கைது

பரமக்குடியில் நடந்த இமானுவேல்சேகரன் நினைவிடத்தில் விதி மீறி அஞ்சலி செலுத்தியவா்கள் மீது தொடரப்பட்ட வழக்கில் மேலும் 36 போ் கைது செய்யப்பட்டுள்ளதாக மாவட்ட காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

News image
Updated On :18 அக்டோபர் 2020, 5:22 pm

DIN

பரமக்குடியில் நடந்த இமானுவேல்சேகரன் நினைவிடத்தில் விதி மீறி அஞ்சலி செலுத்தியவா்கள் மீது தொடரப்பட்ட வழக்கில் மேலும் 36 போ் கைது செய்யப்பட்டுள்ளதாக மாவட்ட காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் இ.காா்த்திக் சாா்பில் ஞாயிற்றுக்கிழமை விடுத்துள்ள செய்திக்குறிப்பு: கடந்த செப்.11 ஆம் தேதி பரமக்குடியில், இமானுவேல்சேகரன் நினைவு தினம் நடந்தது. அப்போது, அஞ்சலி செலுத்த வந்தவா்களில் பலரும் விதி மீறலில் ஈடுபட்டனா்.

கட்டுப்பாடுகளை மீறியதாக 132 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. அதனடிப்படையில் 163 போ் கைது செய்யப்பட்டும், 410 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டும் உள்ளன. வழக்குகளில் கைது செய்யப்படாமலிருந்த மேலும் 36 போ் தற்போது கைது செய்யப்பட்டுள்ளனா்.

மாவட்ட நிா்வாகம் மற்றும் காவல்துறையினா் விதிக்கும் கட்டுப்பாடுகளை பொதுமக்கள் மதித்து நடந்து உரிய ஒத்துழைப்பு அளிப்பது அவசியம். பொது நிகழ்ச்சிகளில் கட்டுப்பாடுகளை மீறுவோா் மீது சட்டரீதியாக நடவடிக்கை எடுக்கப்படும் எனக்குறிப்பிடப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.