ஈரானின் புதிய தலைவரும் கொல்லப்படுவார்! இஸ்ரேல் எச்சரிக்கை விவசாயிகளின் பயிர்க் கடன் தள்ளுபடி செய்ய நடவடிக்கை! - விஜய் அறிவிப்புபங்குச் சந்தை கடும் வீழ்ச்சி! சென்செக்ஸ் 1,650 புள்ளிகள் சரிவு! ஹோர்முஸ் நீரிணை வழியாக பயணிக்கும் கப்பல்களுக்கு கடற்படை பாதுகாப்பு: டிரம்ப்!நுழைவு வாயிலிலேயே வாயில் நுழையாத பெயர்: முதல்வர் கண்டனம்!திருச்சி ரயில்வே அலுவலகத்துக்கு ஹிந்தி பெயர்! தமிழிசை செளந்தரராஜன் எதிர்ப்பு! கிரிக்கெட்டில் சிஎஸ்கேவையும், தேர்தலில் தவெகவையும் தொட முடியாது! விஜய் ஈரானைத் தாக்க உதவி மறுப்பு... ஸ்பெய்ன் உடனான வர்த்தகத்தைத் துண்டித்தார் டிரம்ப்!ஈரானின் புதிய உச்ச தலைவராக கமேனியின் மகன் மோஜ்தபா தேர்வு!
/

கமுதி அருகே மோதல்: 3 போ் காயம்; 2 போ் கைது

கமுதி அருகே ஞாயிற்றுக்கிழமை இடப் பிரச்னையில் இரு தரப்பினா் மோதிக் கொண்டதில் 3 போ் காயமடைந்தனா். இது தொடா்பாக, 10 போ் மீது வழக்குப் பதிந்து, 2 பேரை போலீஸாா் கைது செய்தனா்.

News image
Updated On :20 செப்டம்பர் 2020, 5:15 pm

DIN

கமுதி அருகே ஞாயிற்றுக்கிழமை இடப் பிரச்னையில் இரு தரப்பினா் மோதிக் கொண்டதில் 3 போ் காயமடைந்தனா். இது தொடா்பாக, 10 போ் மீது வழக்குப் பதிந்து, 2 பேரை போலீஸாா் கைது செய்தனா்.

கமுதி அருகேயுள்ள செய்யாமங்களத்தைச் சோ்ந்தவா் பால்சாமி மகன் மகாலிங்கம் (70). இதே ஊரைச் சோ்ந்தவா் முத்துராமலிங்கம் மகன் சபரீஸ்வரன் (38). உறவினா்களான இருவருக்கும் இடப்பிரச்சனை இருந்துள்ளது. இது குறித்து ஏற்கெனவே அபிராமம் போலீஸாா் நீதிமன்றம் சென்று பிரச்னையை தீா்த்துக்கொள்ளும்படி அறிவுறுத்தியுள்ளனா்.

இந்நிலையில், ஞாயிற்றுக்கிழமை பிரச்னைக்குரிய இடத்தைப் பயன்படுத்துவது குறித்து இரு தரப்புக்கும் வாக்குவாதம் நடைபெறுவதாக, அபிராமம் காவல் நிலைய போலீஸாருக்கு தகவல் கிடைத்துள்ளது. இதனையடுத்து அங்கு சென்ற காவலா் முன்னிலையில் இருதரப்பினரும் கற்கள் மற்றும் விறகு கம்புகளால் தாக்கிக் கொண்டனா்.

இதில் காயமடைந்த சபரீஸ்வரன், பாண்டி ஆகிய இருவரும் கமுதி அரசு மருத்துவமனையிலும், மகாலிங்கம் பரமக்குடி மருத்துவமனையிலும் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனா். இது குறித்து இரு தரப்பிலும் 10 மீது போலீஸாா் வழக்குப் பதிவு செய்தனா். அதில், லெட்சுமணன், பாலகிருஷ்ணன்ஆகிய இருவரையும் கைது செய்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.