ஆர்எஸ் மங்கலம் தரிசு நிலங்களை விளைநிலங்களாக மாற்ற மானியம்
ஆர்.எஸ் .மங்கலம் வட்டாரத்தில் உள்ள 80 ஏக்கர் நிலப்பரப்பில் உள்ள தரிசு நிலங்களை விளை நிலங்களாக மாற்ற மானியம்


ஆர்.எஸ்.மங்கலம் வட்டாரத்தில் உள்ள 80 ஏக்கர் நிலப்பரப்பில் உள்ள தரிசு நிலங்களை விளை நிலங்களாக மாற்றி கேழ்வரகு, குதிரைவாலி உள்ளிட்ட சிறு தானியங்கள் விளைவிக்க ஏக்கர் ஒன்றுக்கு ரூ.5360 வீதம் ஒரு ஹெக்டேருக்கு ரூ. 13ஆயிரத்து 400 மானியமாக வழங்கப்படுவதாக ஆர்எஸ்மங்கலம் வேளாண்மை உதவி இயக்குனர் ராஜலட்சுமி தெரிவித்தார் .
ஆர்.எஸ்.மங்கலம் வட்டாரத்தில் சுமார் 80 ஏக்கர் நிலப்பரப்பில் தரிசு நிலங்களாக காட்டுக் கருவேல மரங்கள் செடிகள் மண்டிக் கிடப்பதை தேசிய வேளாண்மை வளர்ச்சி திட்டத்தின் கீழ் தரிசு நிலங்களை விளை நிலங்களாக மாற்றுவதற்கு அரசு மானியமாக ஏக்கர் ஒன்றுக்கு ரூ.5ஆயிரத்து 360 வீதம் ஒரு எக்டேருக்கு ரூ13,400 வழங்கப்படுகிறது.
இத்திட்டத்தை விவசாயிகள் பயன்படுத்தி தரிசு நிலங்களை விளை நிலங்களாக அதில் உள்ள காட்டு கருவேல மரங்கள் மற்றும் புதர் செடி பின்னர் நிலத்தை சமப்படுத்தி உழவு செய்து சிறு தானியங்களான கேழ்வரகு,குதிரைவாலி மற்றும் எள் போன்ற எண்ணெய் வித்து பயிர்களை பயிரிட வேண்டும். இதற்கு அரசு மானியமாக ரூ.5360 ஏக்கருக்கு வழங்கப்படுகிறது என்று தெரிவித்தார்.
இதன் முதற்கட்ட பணியாக திங்கள்கிழமை ஆர்எஸ் மங்கலம் அருகே பி.டி. பட்டுக்கோட்டை கிராமத்தில் தரிசு நிலங்களை விளைநிலங்கள் மாற்றுவதற்கு ஜேசிபி இயந்திரம் மூலம் கருவேல முள் செடிகளை அகற்றும் பணியினை மேற்கொண்டு வருவதை மாவட்ட வேளாண்மை துணை இயக்குனர் பாஸ்கர் மணியன் ஆர்எஸ் மங்கலம் உதவி இயக்குனர் ராஜலட்சுமி ஆகியோர் நேரில் பார்வையிட்டு விவசாயிகளிடம் இதன் பயன்பாடுகளைப் பற்றி எடுத்துரைத்தார்
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...