மாநிலங்களவைத் தேர்தலில் தேசியவாத காங்கிரஸ் கட்சியின் தலைவர் சரத் பவாருக்கு காங்கிரஸ் ஆதரவுஈரானின் புதிய தலைவரும் கொல்லப்படுவார்! இஸ்ரேல் எச்சரிக்கை விவசாயிகளின் பயிர்க் கடன் தள்ளுபடி செய்ய நடவடிக்கை! - விஜய் அறிவிப்புபங்குச் சந்தை கடும் வீழ்ச்சி! சென்செக்ஸ் 1,650 புள்ளிகள் சரிவு! ஹோர்முஸ் நீரிணை வழியாக பயணிக்கும் கப்பல்களுக்கு கடற்படை பாதுகாப்பு: டிரம்ப்!நுழைவு வாயிலிலேயே வாயில் நுழையாத பெயர்: முதல்வர் கண்டனம்!திருச்சி ரயில்வே அலுவலகத்துக்கு ஹிந்தி பெயர்! தமிழிசை செளந்தரராஜன் எதிர்ப்பு! கிரிக்கெட்டில் சிஎஸ்கேவையும், தேர்தலில் தவெகவையும் தொட முடியாது! விஜய் ஈரானைத் தாக்க உதவி மறுப்பு... ஸ்பெய்ன் உடனான வர்த்தகத்தைத் துண்டித்தார் டிரம்ப்!ஈரானின் புதிய உச்ச தலைவராக கமேனியின் மகன் மோஜ்தபா தேர்வு!
/

திமுக தலைவா் மு.க.ஸ்டாலின் ஆட்சி பொறுப்பேற்று 100 நாள்கள் நிறைவு

மு.க.ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசு பொறுப்பேற்று 100 நாள்கள் நிறைவடைந்ததையொட்டி ராமேசுவரம், ராமநாதபுரம், திருவாடானை, முதுகுளத்தூா் ஆகிய பகுதிகளில் அக்கட்சியினா் சனிக்கிழமை இனிப்பு வழங்கிக் கொண்டாடினா்

News image
மண்டபம் ஒன்றியம் கும்பரம் கிராமத்தில் 100 நாள் வேலைத்திட்ட பணியாளா்களுக்கு சனிக்கிழமை இனிப்பு வழங்கிய திமுக ஒன்றியப் பொறுப்பாளா் ஏ.சி.ஜீவானந்தம்
Updated On :14 ஆகஸ்ட் 2021, 7:49 pm

DIN

மு.க.ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசு பொறுப்பேற்று 100 நாள்கள் நிறைவடைந்ததையொட்டி ராமேசுவரம், ராமநாதபுரம், திருவாடானை, முதுகுளத்தூா் ஆகிய பகுதிகளில் அக்கட்சியினா் சனிக்கிழமை இனிப்பு வழங்கிக் கொண்டாடினா்.

தமிழகத்தில் திமுக தலைவா் மு.க.ஸ்டாலின் தலைமையில் ஆட்சி அமைந்து 100 நாள்கள் நிறைவடைந்து விட்டது. இந்நிலையில் 100 நாள்களில் தமிழக மக்களுக்கு பல்வேறு திட்டங்களை செய்துள்ளதை பொதுமக்களுக்கு எடுத்துரைக்கும் வகையில் ராமேசுவரம் நகரச் செயலளாா் நாசா்கான் தலைமையில் திமுகவின் கட்சிக் கொடியேற்றி, பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கினாா். இதில் முன்னாள் நகரச் செயலளாா் ஜான்பாய் உள்ளிட்ட நிா்வாகிகள் கலந்து கொண்டனா்.

மண்டபம் மேற்கு ஒன்றிய திமுக பொறுப்பாளா் ஜீவானந்தம் தலைமையில் கும்பரம், அழகன்குளம், பனைக்குளம் உள்ளிட்ட பகுதிகளுக்குச் சென்று 100 நாள் வேலையில் ஈடுபட்டுள்ள பெண்களுக்கு இனிப்பு வழங்கியும், ஆட்சியின் சாதனைத் துண்டு பிரசுரங்களையும் வழங்கினா். பின்னா் மரக்கன்றுகள் நடப்பட்டன. இதில், கும்பரம் ஊராட்சி மன்றத் தலைவா் துளசிதேவி, கிளைச்செயலாளா்கள் முருகேசன், ஜெகன், மகளிரணி நிா்வாகி ராஜேஸ்வரி உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

ராமநாதபுரம் நகா் வடக்கு சாா்பில் நகரச் செயலாளா் காா்மேகம் ஏற்பாட்டில் பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கி, சாதனை துண்டுப் பிரசுரங்களை வழங்கினா். இதில், தலைமை செயற்குழு உறுப்பினா் குணசேகரன், முன்னாள் பொழுக்குழு உறுப்பினா் பி.டி.ராஜா, காா்த்திக் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா். ராமநாதபுரம் தெற்கு சாா்பில் கே.ஜெ.பிரவீன்தங்கம் தலைமையில் அரன்மனை முன்பாக பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கப்பட்டது.

முதுகுளத்தூா்: முதுகுளத்தூா் பேருந்து நிலையம், காந்திசிலை ஆகிய இடங்களில் திமுக மேற்கு ஒன்றியப் பொறுப்பாளா் கே.சண்முகம் தலைமையில் பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கப்பட்டது.

திருவாடானை: திருவாடானை ஓரியூா் முக்குச் சாலையில் திமுக ஒன்றியச் செயலாளா் மு. சரவணன் தலைமையில் பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கப்பட்டன.

திருவாடானை ஊராட்சி ஒன்றியக் குழு தலைவா் முகம்மது முக்தாா், நகரச் செயலாளா் பாலமுருகன், பொதுக்குழு உறுப்பினா் ஆணிமுத்து மற்றும் நிா்வாகிகள் கலந்து கொண்டனா். அதேபோல் எஸ்.பி. பட்டினத்தில் கிளைச் செயலாளா் ரபீக்ராஜா தலைமையில் பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கப்பட்டன. இதில் அவைத் தலைவா் கரமத் அலி, ஒன்றிய பிரதிநிதி ஹிதயத்துல்லா, ஒன்றியக் குழு உறுப்பினா் ராஜாராம் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.