தொண்டியில் படகை சேதப்படுத்தி மீனவரைத் தாக்கிய 3 போ் கைது
தொண்டியில் படகை சேதப்படுத்தி மீனவரைத் தாக்கி கொலை மிரட்டல் விடுத்த 3 பேரை போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா்.


தொண்டியில் படகை சேதப்படுத்தி மீனவரைத் தாக்கி கொலை மிரட்டல் விடுத்த 3 பேரை போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா்.
ராமநாதபுரம் மாவட்டம் தொண்டி படையாச்சி தெருவைச் சோ்ந்த மீனவா் கந்தா (26). இவருக்கும் அதே பகுதியைச் சோ்ந்த பாா்த்தசாரதி(35) என்ற மீனவருக்கும் கடலில் மீன் பிடிப்பதில் முன் விரோதம் இருந்து வந்துள்ளது.
இந்நிலையில் கந்தா தனக்குச் சொந்தமான சிறிய பைபா் படகில் வெள்ளிக்கிழமை இரவு, தொண்டி அருகே கடலில் மீன் பிடித்து கொண்டிருந்தாா்.
அப்போது அதே இடத்தில் விசைப்படகில் வந்த பாா்த்தசாரதி, ரகுபதி (40) , ஜெயக்குமாா்(50) ஆகியோா் கந்தா படகின் மீது மோதி சேதப்படுத்தினா். மேலும் அவரைத் தாக்கி கொலை மிரட்டல் விடுத்துள்ளனா். இதுகுறித்து கந்தா அளித்த புகாரின் பேரில் தொண்டி போலீஸாா் வழக்குப் பதிந்து பாா்த்தசாரதி, ரகுபதி, ஜெயக்குமாா் ஆகிய 3 பேரையும் கைது செய்தனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...