புதுதில்லி: அமெரிக்கா, இஸ்ரேல் - ஈரான் மீது தாக்குதல் நடத்தி வருவதால் உலகளவில் பதற்றம் அதிகரித்து, ஈரான் ஹோர்முஸ் நீரிணை ஈரான் மூடியதால், கச்சா எண்ணெய் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டது.
இதனிடையில், ஃபியூச்சர்ஸ் வர்த்தகத்தில் கச்சா எண்ணெய் விலை பீப்பாய் ஒன்றுக்கு ரூ.119 உயர்ந்து ரூ.9,171 ஆக வர்த்தகமானது. மேலும், இது எரிபொருள் விலையை அதிகரிப்பதோடு, உலகப் பொருளாதார மந்தநிலை குறித்த அச்சத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
மல்டி கமாடிட்டி எக்ஸ்சேஞ்சில், மார்ச் மாதம் விநியோகத்திற்கான கச்சா எண்ணெய் விலை 1.31 சதவீதம் அதிகரித்து பீப்பாய்க்கு ரூ.9,171 ஆக உயர்ந்துள்ள நிலையில் ஏப்ரல் மாத ஃபியூச்சர்ஸ் ஒப்பந்தத்தில் பீப்பாய்க்கு ஒன்றுக்கு 1.83 சதவீதம் உயர்ந்து ரூ.9,107 ஆக உள்ளது.
உலகளாவிய எண்ணெய் விநியோகத்தில், ஐந்தில் ஒரு பங்கு ஹோர்முஸ் நீரிணை வழியாக நடைபெறுகிறது. ஹோர்முஸ் நீரிணை மூடப்படுவதாக ஈரான் அறிவித்த நிலையில், கச்சா எண்ணெய் போக்குவரத்து சீர்குலைத்து உள்ளதால், அதன் விலை தொடர்ந்து உயர்ந்து வருவதாக ஆய்வாளர்கள் தெரிவித்தனர்.
சர்வதேச சந்தையில், மே மாதத்திற்கான பிரெண்ட் எண்ணெய் ஃபியூச்சர்ஸ் சந்தையில் பீப்பாய்க்கு ஒன்றுக்கு 2.73 சதவீதம் அதிகரித்து 105.96 அமெரிக்க டாலர்களாகவும், மே மாத ஒப்பந்தத்திற்கான வெஸ்ட் டெக்சாஸ் இன்டர்மீடியட் கச்சா எண்ணெய் நியூயார்க்கில் 2.36 சதவீதம் உயர்ந்து பீப்பாய்க்கு ஒன்றுக்கு 99.13 அமெரிக்க டாலர்களாக உள்ளது.
இதற்கிடையில், ஈரானிய ஏற்றுமதி முனையத்தில் அமெரிக்கா மற்றும் இஸ்ரேலும் வான்வழித் தாக்குதல்களை மேற்கொண்டதையடுத்து நிலைமை இன்னமும் பதட்டமாகவே உள்ளது.
Summary
Crude oil prices rose Rs 119 to Rs 9,171 per barrel in futures trade on Monday as escalating tensions in West Asia kept supply risks in focus.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

போர்நிறுத்தம் எதிரொலி: எண்ணெய் விற்பனை நிறுவனப் பங்குகள் உயர்வு!

போரை விரும்பும் வல்லரசுகள்!
கச்சா எண்ணெய் விலை மீண்டும் 100 டாலரைத் தாண்டியது!

கச்சா எண்ணெய் விலை 26% உயர்வு!
வீடியோக்கள்

DINAMANI வார ராசிபலன்! | Apr. 12 முதல் Apr. 18 வரை! | ஜோதிடரத்னா ராமராமாநுஜதாஸன்! | Weekly Horoscope
இணையதளச் செய்திப் பிரிவு

தில்லியை வென்று நம்பிக்கையைப் பெறுமா சிஎஸ்கே? | CSK v DC Match Preview |
தினமணி செய்திச் சேவை

LIK Movie Review | தீமா.. தீமா.. தேறுமா! | Pradeep Ranganathan | Vignesh Shivan | krithi shetty
தினமணி செய்திச் சேவை

புதுச்சேரி & கேரளத்தில் வாக்குப்பதிவு நிறைவு! வாக்குப்பதிவில் நடந்த சுவாரசியங்கள்!
தினமணி செய்திச் சேவை


