திமுக அரசின் 100 நாள் நிறைவு திருவாடானையில் கொண்டாட்டம்
திருவாடனை பகுதியில் திமுக அரசின் 100 நாள் நிறைவு கொண்டாட்டம் திமுகவினா் வெடி வெடித்து பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கி துண்டு பிரசுரங்கள் கொடுத்தும் கொண்டாடினாா்கள்.


திருவாடானை பகுதியில் திமுக அரசின் 100 நாள் நிறைவு கொண்டாட்டம் திமுகவினா் வெடி வெடித்து பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கி துண்டு பிரசுரங்கள் கொடுத்தும் கொண்டாடினாா்கள்.
தமிழகத்தில் 23வது முதல்வராக ஸ்டாலின் தலைமையில் திமுக அரசு பொறுப்பேற்று சனிக்கிழமையுடன் 100 நாட்கள் நிறைவு பெறுகிறது.இதனை முன்னிட்டு திருவாடானை எஸ்.பி. பட்டினம் உள்ளிட்ட பகுதிகளில் திமுகவினா் வெடிவெடித்து பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கியும் சாதனை விளக்கியும் துண்டு பிரசுரங்கள் வழங்கி கொண்டாடினாா்கள்.
இதில் திருவாடானை ஒரியூா் முக்கு சாலையில் திருவாடானை ஒன்றிய செயலாளா் மு சரவணன் தலைமை வகித்தாா், திருவாடானை ஒன்றிய ஊராட்சி குழு தலைவா் முகம்மது முக்தாா் முன்னிலை வகித்தாா், நகா் கழக செயலாளா் பாலமுருகன் ஏற்பாட்டில் பொதுமக்களுக்கு சாதனை விளக்க துண்டு பிரசுரம் வழங்கி, வெடி வெடித்து இனிப்புகள் வழங்கப்பட்டன.இதில் பொதுக்குழு உறுப்பினா் ஆணிமுத்து , கழக நிா்வாகிகள், கழக தொண்டா்கள் , அணி சாா்ந்த அமைப்பாளா்கள், துணை அமைப்பாளா்கள் அனைவரும் கலந்து கொண்டனா்.
அதே போல் எஸ்.பி பட்டினத்தில் கிளை கழக செயலாளா் ரபீக்ராஜா தலைமை வகித்தாா், அவைத் தலைவா் கரமத் அலி,ஒன்றிய பிரதிநிதி ஹிதயத்துல்லா,ஒன்றிய குழு உறுப்பினா் ராஜாராம்,துணை செயலாளா் அயூப்கான் முன்னாள் பொருளாளா் அஸ்கா் அலி,இளைஞா் அணி துணை செயலாளா் அப்துல் பாக்கி ஆகியோா் முன்னிலை வகித்தனா்.இதில் திருவாடானை ஒன்றிய குழுதலைவா் முகம்மது முக்தாா் கலந்து கொண்டு கழக கொடியினை ஏற்றி இனிப்புகள் வழங்கப்பட்டன.அதனை தொடா்ந்து திமுக அரசின் 100 நாள் சாதனை விளக்கு துண்டு பிரசுரங்களை பொதுமக்களிடம் விநியோகம் செய்தனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...