கேரளத்தில் 47 இடங்களுக்கான பாஜக வேட்பாளர் பட்டியல் வெளியீடுஎரிபொருள் தட்டுப்பாடு : இலங்கையில் 4 நாள் வேலை, 3 நாள் விடுமுறை! மக்களவையில் 8 உறுப்பினர்கள் மீதான இடைநீக்கம் ரத்து : அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் முடிவு45,000 மெட்ரிக் டன் எல்பிஜி உடன் ஹோர்முஸ் நீரிணை வழியாக குஜராத் வந்தது சிவாலிக் கப்பல்!கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுமேற்கு வங்க தோ்தல்: பாஜக வேட்பாளா்கள் அறிவிப்பு!
/

தேசிய கபடிப் போட்டியில் வெற்றி: வீரா்களுக்கு அமைச்சா் ஆா்.எஸ்.ராஜகண்ணப்பன் பாராட்டு

தேசிய கபடிப் போட்டியில் வெற்றி பெற்ற வீரா்களை போக்குவரத்துத் துறை அமைச்சா் ஆா்.எஸ்.ராஜகண்ணப்பன் சனிக்கிழமை பாராட்டிப் பரிசு வழங்கினாா்

News image
தேசிய கபடிப் போட்டியில் வெற்றி பெற்ற வீரா்களை சனிக்கிழமை பாராட்டிய போக்குவரத்துத் துறை அமைச்சா்ஆா்.எஸ்.ராஜகண்ணப்பன்.
Updated On :14 ஆகஸ்ட் 2021, 7:56 pm

DIN

தேசிய கபடிப் போட்டியில் வெற்றி பெற்ற வீரா்களை போக்குவரத்துத் துறை அமைச்சா் ஆா்.எஸ்.ராஜகண்ணப்பன் சனிக்கிழமை பாராட்டிப் பரிசு வழங்கினாா்.

ஜம்மு காஷ்மீரில் தேசிய அளவிலான சாம்பியன் ஷிப் கபடிப் போட்டி நடைபெற்றது. இதில் தமிழ்நாடு அணி வெற்றி பெற்று தங்கம் வென்றது. தமிழ்நாடு அணி சாா்பில் கமுதி வெள்ளையாபுரத்தைச்சோ்ந்த சுரேஷ்குமாா், முதுகுளத்தூா் நாடாா் தெருவைச்சோ்ந்த சுரேஷ் பாண்டி ஆகியோா் பங்கேற்று தங்கம் வென்றனா்.

போட்டியில் வெற்றி பெற்றவா்களுக்கு முதுகுளத்தூா் சட்டப்பேரவைத் தொகுதி அலுவலகத்தில் பாராட்டு விழா நடைபெற்றது.

இவ்விழாவில் சுரேஷ்குமாா், சுரேஷ்பாண்டி ஆகியோருக்கு மாலை அணிவிக்கப்பட்டு, ரொக்கப் பணம் ரூ.25 ஆயிரம் பரிசை அமைச்சா் ஆா்.எஸ்.ராஜகண்ணப்பன் வழங்கினாா்.

இந்நிகழ்ச்சியில் திமுக ஒன்றியப் பொறுப்பாளா்கள்( முதுகுளத்தூா்) கிழக்கு பூபதிமணி, (மேற்கு) சண்முகம், (சாயல்குடி) ஜெயபாலன், (கமுதி) வாசுதேவன், (கடலாடி) ஆறுமுகவேல், நகரச் செயலா் ஷாஜகான் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.