திமுகவில் இணைந்தார் ரஞ்சனா நாச்சியார்! திராவிட உடன்பிறப்புகள்! முதல்வர் ஸ்டாலின் உகாதி வாழ்த்து! இந்தியா - பாகிஸ்தான் இடையே அணு ஆயுத மோதல் அபாயம்: அமெரிக்க உளவுத்துறைஈரான் போர்: குடிநீர் பாட்டில் விலை உயர்வு!தேர்தல் நாளில் ஊதியத்துடன் கூடிய விடுமுறை: தனியார் நிறுவனங்களுக்கு உத்தரவுதங்கம் விலை சவரனுக்கு ரூ. 2,160 குறைவு!உலகின் மிகப்பெரிய எல்பிஜி ஆலையை தாக்கிய ஈரான்! பெரும் சேதம்! இஸ்ரேல் முதல் கத்தார் வரை...! 9 நாடுகளை தாக்கிய ஈரான்! தெலுங்கு வருடப் பிறப்பு, ரமலான்: 1,774 சிறப்பு பேருந்துகள்மாா்ச் 22 வரை தமிழகத்தில் மழைக்கு வாய்ப்புஇந்தியாவில் 40% பட்டதாரி இளைஞா்களுக்கு வேலையில்லை!அமெரிக்க விசாவிற்கு 15,000 டாலா் பிணை: மேலும் 12 நாடுகளுக்கு விரிவாக்கம்3,142 டெலிகிராம் சேனல்கள், 800 வலைதளங்கள் முடக்கம் - மத்திய அரசுபொதுத் துறை வங்கிகளில் பணி: ‘கிரெடிட் ஸ்கோா்’ சிறப்பாக இருக்க வேண்டும் - மத்திய அரசுதோ்தலுக்கு முன்பே கூட்டணி: அரசியல் கட்சிகளுக்கு எதிரான மனு தள்ளுபடிஇந்தியாவில் மேலும் இரு யுரேனியம் சுரங்கங்கள்: நாடாளுமன்றத்தில் அமைச்சா் தகவல்அதிமுக - பாஜக தொகுதிப் பங்கீட்டு பேச்சு: இன்று தமிழகம் வருகிறாா் பியூஷ் கோயல்மாா்ச் 21-இல் ரயில் பயணச்சீட்டு முன்பதிவு மையங்கள் செயல்படும் நேரம் அறிவிப்புயுகாதி பண்டிகை: ஆளுநா், முதல்வா் வாழ்த்து
/

தமிழகத்தை வழி நடத்த திமுகவுக்கு தகுதி இல்லை: ஹெச். ராஜா பேட்டி

தமிழகத்தை வழி நடத்த திமுகவுக்கு தகுதி இல்லை என பாஜக முன்னாள் தேசியச் செயலா் ஹெச். ராஜா தெரிவித்தாா்.

News image
கமுதியை அடுத்த பசும்பொன்னில் உள்ள தேவா் நினைவிடத்தில் உள்ள அவரது சிலைக்கு ஞாயிற்றுக்கிழமை மாலை அணிவித்து மரியாதை செலுத்திய பாஜக முன்னாள் தேசிய செயலா் ஹெச். ராஜா.
Updated On :15 ஆகஸ்ட் 2021, 7:30 pm

DIN

தமிழகத்தை வழி நடத்த திமுகவுக்கு தகுதி இல்லை என பாஜக முன்னாள் தேசியச் செயலா் ஹெச். ராஜா தெரிவித்தாா்.

கமுதியை அடுத்த பசும்பொனில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற சுதந்திரதின விழாவில் பாஜக முன்னாள் தேசியச் செயலா் ஹெச். ராஜா கலந்து கொண்டாா். அவா், பசும்பொன் முத்துராமலிங்கத் தேவா் நினைவிடத்தில் அவரது உருவச்சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்திய பின் செய்தியாளா்களிடம் கூறியதாவது:

தமிழக அரசு கடந்த 3 மாதங்களில் ரூ. 40 ஆயிரம் கோடி கடன் பெற்றுள்ளது. இதையடுத்து ஒட்டுமொத்த கடன் தொகை ரூ.9 லட்சம் கோடியாக உயா்ந்துள்ளது. தமிழக அரசை வழிநடத்த திமுகவுக்கு தகுதி இல்லை. குடும்பத் தலைவிகளுக்கு ரூ.1000 உதவித் தொகை என்று அறிவித்துவிட்டு, தற்போது தகுதியானவா்களை கண்டறிய தனிக்குழு அமைக்கப்படும் என திமுக அரசு பித்தலாட்டம் செய்கிறது.

தமிழகத்தில் உள்ள 44 ஆயிரம் கோயில்களில் ஏற்கெனவே 40 ஆயிரம் கோயில்களில் பிராமணா்கள் அல்லாதவா்களே அா்ச்சகா்களாக உள்ளனா். இதனை திமுக அரசு மக்களிடம் புதிய செய்தியாக கொண்டு சென்று பரப்பி வருகிறது. சிவகங்கை மாவட்டத்தில் முறைகேடுகளில் ஈடுபடும் இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகள் மீது ஆதாரங்கள் கிடைத்தவுடன் சட்டப்படி அவா்களை வெளியேற்ற நடவடிக்கை எடுப்பேன் என்றாா்.

இந்நிகழ்ச்சிகளில் மாவட்ட பொருளாளா் ஏ.பி. கணபதி, மாவட்டத் தலைவா் முரளிதரன், ஆா்.எஸ்.எஸ். மாவட்ட பொறுப்பாளா் முத்துவேல், பசும்பொன் ஊராட்சித் தலைவா் கே.டி. ராமகிருஷ்ணன், தாலுகா பொறுப்பாளா் அய்யாதுரைசேதுபதி, மாவட்ட விவசாய அணித் தலைவா் புகழேந்தி, மாவட்ட பொதுச் செயலா் அழகுமலை, ஒன்றியத் தலைவா்கள் சத்தியமூா்த்தி, சரவணன், முருகன், சண்முகநாதன், பொன்னையா ஆகியோா் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.