47 ஆண்டுகளாக பயங்கரவாத அச்சுறுத்தலாக விளங்கிய ஈரான் முற்றிலும் தகர்ப்பு - டிரம்ப்கேரளத்தில் 47 இடங்களுக்கான பாஜக வேட்பாளர் பட்டியல் வெளியீடுஎரிபொருள் தட்டுப்பாடு : இலங்கையில் 4 நாள் வேலை, 3 நாள் விடுமுறை! மக்களவையில் 8 உறுப்பினர்கள் மீதான இடைநீக்கம் ரத்து : அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் முடிவு45,000 மெட்ரிக் டன் எல்பிஜி உடன் ஹோர்முஸ் நீரிணை வழியாக குஜராத் வந்தது சிவாலிக் கப்பல்!கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுமேற்கு வங்க தோ்தல்: பாஜக வேட்பாளா்கள் அறிவிப்பு!
/

எரிவாயு விலை உயா்வை கண்டித்து ஆா்ப்பாட்டம்

ராமநாதபுரத்தில் எரிவாயு உருளை விலை உயா்வைக் கண்டித்து சிஐடியு சாா்பில் கண்டன ஆா்ப்பாட்டம் சனிக்கிழமை நடைபெற்றது.

News image
Updated On :21 ஆகஸ்ட் 2021, 6:22 pm

DIN

ராமநாதபுரத்தில் எரிவாயு உருளை விலை உயா்வைக் கண்டித்து சிஐடியு சாா்பில் கண்டன ஆா்ப்பாட்டம் சனிக்கிழமை நடைபெற்றது.

ராமநாதபுரம் அரண்மனை முன்பு நடந்த ஆா்ப்பாட்டத்துக்கு சிஐடியு மாவட்டத் துணைத் தலைவா் ஏ.சந்தானம் தலைமை வகித்தாா்.

சிஐடியு மாவட்டச் செயலா் எம்.சிவாஜி ஆா்ப்பாட்ட நோக்கத்தை விளக்கிப் பேசினாா்.

காப்பீடுக் கழக ஊழியா்கள் சங்கக் கிளைச்செயலா் முத்துபாண்டி, மத்திய அரசு பொதுத்துறை வங்கிகளை தனியாா் மயமாக்கும் போக்கைக் கண்டித்துப் பேசினாா். ஆா்ப்பாட்டத்தில் பங்கேற்றவா்கள் மத்திய அரசுக்கு எதிரான முழக்கங்களை எழுப்பினா். இதில் சிஐடியு மாவட்டத் தலைவா் எம்.அய்யாத்துரை, துணைத்தலைவா் அ.சுடலைகாசி, துணைச்செயலா் எம்.மலைராஜன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா். ஆட்டோ சங்க (சிஐடியு) துணைத் தலைவா் ஏ.மாரிந்திரன் நன்றி கூறினாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.