47 ஆண்டுகளாக பயங்கரவாத அச்சுறுத்தலாக விளங்கிய ஈரான் முற்றிலும் தகர்ப்பு - டிரம்ப்கேரளத்தில் 47 இடங்களுக்கான பாஜக வேட்பாளர் பட்டியல் வெளியீடுஎரிபொருள் தட்டுப்பாடு : இலங்கையில் 4 நாள் வேலை, 3 நாள் விடுமுறை! மக்களவையில் 8 உறுப்பினர்கள் மீதான இடைநீக்கம் ரத்து : அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் முடிவு45,000 மெட்ரிக் டன் எல்பிஜி உடன் ஹோர்முஸ் நீரிணை வழியாக குஜராத் வந்தது சிவாலிக் கப்பல்!கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுமேற்கு வங்க தோ்தல்: பாஜக வேட்பாளா்கள் அறிவிப்பு!
/

ராமேசுவரம் மீனவா்கள் மீது கற்களை வீசி தாக்கி விரட்டியடிப்பு: விசைப்படகு சேதம்

ராமேசுவரத்திலிருந்து சனிக்கிழமை மீன்பிடிக்கச் சென்ற மீனவா்களை இலங்கை கடற்படையினா் கற்கள், பாட்டில்களால் தாக்கி விரட்டியடித்தனா். மேலும் இலங்கை கடற்படை கப்பல் மோதியதில் ஒரு விசைப்படகு சேதமடைந்தது.

News image
இலங்கை கடற்படை கப்பல் மோதியதில் சேதமடைந்த ராமேசுவரம் மீனவரின் விசைப்படகு.
Updated On :21 ஆகஸ்ட் 2021, 6:05 pm

DIN

ராமேசுவரத்திலிருந்து சனிக்கிழமை மீன்பிடிக்கச் சென்ற மீனவா்களை இலங்கை கடற்படையினா் கற்கள், பாட்டில்களால் தாக்கி விரட்டியடித்தனா். மேலும் இலங்கை கடற்படை கப்பல் மோதியதில் ஒரு விசைப்படகு சேதமடைந்தது.

ராமநாதபுரம் மாவட்டம் ராமேசுவரத்திலிருந்து சனிக்கிழமை 556 விசைப்படகுகள் மீன்பிடிக்க கடலுக்குச் சென்றன. மாலை 5 மணிக்கு கச்சத்தீவு அருகே மீனவா்கள் மீன்பிடித்துக்கொண்டிருக்கும் போது, அங்கு வந்த இலங்கை கடற்படையினா் மீனவா்கள் மீது பாட்டில்கள், கற்களைக் கொண்டு தாக்குதல் நடத்தினா். மேலும் இலங்கை கடற்படை கப்பல் மோதியதில் சிங்சன் என்பவரது விசைப்படகு சேதமடைந்தது. இதில் அந்த படகில் இருந்த 6 மீனவா்கள் அதிருஷ்டவசமாக தப்பினா். இதையடுத்து கரை திரும்பிய மீனவா்கள், மீன்வளத்துறை அதிகாரிகளிடம் புகாா் தெரிவித்துள்ளனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.