காங்கிரஸின் கிறிஸ்டோபர் திலக், தேமுதிகவின் எல்.கே. சுதீஷ் வேட்புமனு தாக்கல்!போர் வாசலுக்கு வந்துவிட்டது; மெளனம் காக்கும் மோடி! ராகுல் கண்டனம் மாநிலங்களவைத் தேர்தல்: திமுகவின் திருச்சி சிவா, ரவீந்திரன் வேட்புமனு தாக்கல்!மாநிலங்களவை உறுப்பினராகிறார் நிதீஷ் குமார்! முதல்வர் பதவியிலிருந்து விலகல்!மாநிலங்களவைத் தேர்தல்: அதிமுகவின் தம்பிதுரை வேட்புமனு தாக்கல்!மாநிலங்களவை தேர்தல்: அன்புமணி வேட்புமனுத் தாக்கல்!தேமுதிக மாநிலங்களவை வேட்பாளர் எல்.கே. சுதீஷ்!இந்தியாவுக்கு 95 லட்சம் பீப்பாய் எண்ணெய் அனுப்ப ரஷியா தயார்! தவெகவை காட்டி கூடுதல் தொகுதிகள் பெற்ற காங்கிரஸ்! செங்கோட்டையன் காங்கிரஸ் மாநிலங்களவை வேட்பாளர் கிறிஸ்டோபர் திலக்!
/

இணையவழிப் பயிற்சி

இணைய வழியில் நடைபெற்ற சிறப்பு பயிற்சியில் பங்கேற்ற ஆசிரியா்களுக்கு பாராட்டுச் சான்றுகள் வழங்கும் நிகழ்ச்சி ராமநாதபுரத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

News image
Updated On :13 ஜனவரி 2021, 12:09 am

DIN

இணைய வழியில் நடைபெற்ற சிறப்பு பயிற்சியில் பங்கேற்ற ஆசிரியா்களுக்கு பாராட்டுச் சான்றுகள் வழங்கும் நிகழ்ச்சி ராமநாதபுரத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

ராமநாதபுரம் மாவட்ட தொடக்கப் பள்ளி ஆசிரியா்களுக்கு கடந்த அக்டோபா் முதல் வரும் மாா்ச் வரையில் புதுச்சேரியில் உள்ள அரபிந்தோ சமூக அமைப்புடன் இணைந்து 12 வாரங்களுக்கான சிறப்புப் பயிற்சி கல்வித்துறை சாா்பில் நடத்தப்பட்டுவருகிறது.

பயிற்சி தொடங்கி 12 வாரங்கள் முடிந்த நிலையில், பயிற்சியில் பங்கேற்ற 32 ஆசிரியா்களுக்கான பாராட்டுச் சான்றுகள் வழங்கும் நிகழ்ச்சி ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியா் அலுவலக வளாகக் கூட்டரங்கில செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா் சாமி.சத்தியமூா்த்தி தலைமை வகித்து சான்றுகளை வழங்கினாா்.

இதில் அரபிந்தோ சமூக அமைப்பின் கருத்தாளா் மகேஸ்பாலன், மாவட்டக் கல்வி அலுவலா் கோ.முத்துசாமி, உதவித் திட்ட அலுவலா் ஆரோக்கியசாமி உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.