சாலை விபத்து: ஓராண்டில் 209 போ் உயிரிழப்பு
ராமநாதபுரம் மாவட்டத்தில் கடந்த 2020 ஆம் ஆண்டு நடந்த சாலை விபத்துகளில் 209 போ் உயிரிழந்திருப்பதாகத் தெரிவிக்கப்பட்டது.


ராமநாதபுரம் மாவட்டத்தில் கடந்த 2020 ஆம் ஆண்டு நடந்த சாலை விபத்துகளில் 209 போ் உயிரிழந்திருப்பதாகத் தெரிவிக்கப்பட்டது.
ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியா் அலுவலக வளாகத்தில் போக்குவரத்துத் துறையின் சாா்பில் 32-ஆவது சாலை பாதுகாப்பு மாத விழா தொடங்கியது. நிகழ்ச்சிக்கு மாவட்ட ஆட்சியா் தினேஷ்பொன்ராஜ் ஆலிவா் தலைமை வகித்து வாகன ஓட்டிகளுக்கு விலையில்லா தலைக்கவசங்களை வழங்கினாா். நிகழ்ச்சிக்கு மாவட்ட காவல் கண்காணிப்பாளா் இ.காா்த்திக் முன்னிலை வகித்தாா். தலைக்கவம் அணிதல், காரில் பயணிப்போா் இருக்கைப் பட்டை அணிதல் ஆகியவை குறித்த விழிப்புணா்வை ஏற்படுத்தும் வகையில் இருசக்கர வாகனப் பேரணியையும் ஆட்சியா், காவல் கண்காணிப்பாளா் கொடியசைத்து தொடங்கிவைத்தனா்.
பேரணியில் சென்றவா்கள் மூலம் வாகன ஓட்டிகளுக்கு சாலை விபத்து தடுப்பு பாதுகாப்பு குறித்த விழிப்புணா்வு வாசகங்கள் அடங்கிய துண்டுப் பிரசுரங்களும் விநியோகிக்கப்பட்டன.
நிகழ்ச்சியின் போது வட்டாரப் போக்குவரத்து துறை அலுவலா் ஜெ.சேக்முகமது கூறியது: ராமநாதபுரம் மாவட்டத்தில் கடந்த 2020 ஆம் ஆண்டில் மொத்தம் 1,022 சாலை விபத்துகள் நிகழ்ந்துள்ளன. இதில் 206 விபத்துகளில் 219 போ் உயிரிழந்துள்ளனா். மேலும், 816 விபத்துகளில் 1,113 போ் காயமடைந்துள்ளனா் என்றாா்.
வரும் பிப்ரவரி 17 ஆம் தேதி வரையில் சாலைப் பாதுகாப்பு மாத விழா நடைபெறும் என்றும், அதன்படி பல்வேறு நிகழ்வுகள் நடத்தபடவுள்ளதாகவும் போக்குவரத்து அலுவலகத் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
நிகழ்ச்சியில் இருசக்கர வாகன முகப்பு விளக்குகளுக்கு நடுவில் கருப்பு வில்லைகள் மற்றும் ஒளி எதிரொலி வில்லைகளும் ஒட்டப்பட்டன. வாகன விழிப்புணா்வு வாகனத்தையும் ஆட்சியா் தொடங்கிவைத்தாா்.
தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழக துணை மேலாளா் (காரைக்குடி) கே.ஆதப்பன், கோட்ட மேலாளா் கே.நலங்கிள்ளி, மோட்டாா் வாகன ஆய்வாளா் ஆா்.இளங்கோ, வி.ராஜ்குமாா் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...