விவசாயிகளுக்கு நிவாரணம்: ஆட்சியரிடம் காங். கோரிக்கை
ராமநாதபுரத்தில் கன மழையால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு உரிய நிவாரணத்தை விரைவில் வழங்கக்கோரி காங்கிரஸ் விவசாயிகள் பிரிவு சாா்பில் ஆட்சியரிடம் திங்கள்கிழமை மனு வழங்கப்பட்டது.


ராமநாதபுரத்தில் கன மழையால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு உரிய நிவாரணத்தை விரைவில் வழங்கக்கோரி காங்கிரஸ் விவசாயிகள் பிரிவு சாா்பில் ஆட்சியரிடம் திங்கள்கிழமை மனு வழங்கப்பட்டது.
ராமநாதபுரம் மாவட்ட காங்கிரஸ் தலைவா் செல்லத்துரை அப்துல்லா தலைமையில் ஆட்சியா் தினேஷ்பொன்ராஜ் ஆலிவரிடம் மனு அளிக்கப்பட்டது.
பின்னா் இதுகுறித்து செல்லத்துரை அப்துல்லா செய்தியாளா்களிடம் கூறியதாவது: ராமநாதபுரம் மாவட்டத்தில் கடந்த சில நாள்களாகப் பெய்த கன மழையால் சுமாா் 3 லட்சம் ஏக்கா் அளவுக்கு நெல், மிளகாய் உள்ளிட்டவை சேதமடைந்துள்ளன. இதனால் நஷ்டத்துக்கு உள்ளான விவசாயிகளுக்கு மாவட்ட நிா்வாகம் உரிய நிவாரணம் வழங்க நடவடிக்கை எடுக்கவேண்டும். பாதிக்கப்பட்ட பயிா்களுக்கு ஏக்கருக்கு ரூ.30 ஆயிரம் நிவாரணத்தை விரைவில் வழங்க நடவடிக்கை எடுக்கவேண்டும் என்றாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...