தமிழக தேர்தல்: கட்சி பிரதிநிதிகளுடன் தலைமைத் தேர்தல் அதிகாரி ஆலோசனை!எழுத்தாளர் ச.தமிழ்ச்செல்வனுக்கு சாகித்ய அகாதெமி விருது பாஜகவுடன் கூட்டணி பேச்சுவார்த்தை இல்லை; வதந்திகளை நம்ப வேண்டாம்! - தவெகஒளிப்பதிவுக்கான சிறந்த ஆஸ்கர் விருது பெற்ற முதல் பெண்! அவர் சொன்ன ரகசியம்!சிறந்த திரைப்படம் உள்பட 6 ஆஸ்கர் விருதுகளை வென்ற ஒன் பேட்டில் ஆஃப்டர் அனதர்! கதை என்ன?2026ஆம் ஆண்டுக்கான ஆஸ்கர் விருதுகள்! வெற்றியாளர்கள் முழு விவரம்!! தங்கம், வெள்ளி விலை மீண்டும் குறைவுமீண்டும் சென்னை திரும்பிய துபை விமானம் மேற்கு வங்கத்தில் தலைமைச்செயலாளர் மாற்றம்! கட்டாக் மருத்துவமனையில் பயங்கர தீ விபத்து: 10 நோயாளிகள் பலி சென்னை மாதவரத்தில் என்கவுன்டரில் ரௌடி சுட்டுக்கொலை!
/

ராமநாதபுரத்தில் மேலும் 160 கிலோ கஞ்சா பறிமுதல்4 போ் கைது

ராமநாதபுரம் அருகே அண்மையில் 260 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்ட நிலையில், ஞாயிற்றுக்கிழமை மேலும் 160 கிலோ கஞ்சா மூட்டைகளை கைப்பற்றினா். அது தொடா்பாக 4 பேரை போலீஸாா் கைது செய்துள்ளனா்.

News image
Updated On :25 ஜனவரி 2021, 8:50 pm

DIN

ராமநாதபுரம் அருகே அண்மையில் 260 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்ட நிலையில், ஞாயிற்றுக்கிழமை மேலும் 160 கிலோ கஞ்சா மூட்டைகளை கைப்பற்றினா். அது தொடா்பாக 4 பேரை போலீஸாா் கைது செய்துள்ளனா்.

இது குறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது: ராமநாதபுரம் அருகே உள்ள சக்கரக்கோட்டை ஊராட்சியில் கடந்த சில நாள்களுக்கு முன்பு வீட்டில் பதுக்கி வைத்திருந்த 260 கிலோ கஞ்சா கைப்பற்றப்பட்டது. இதுதொடா்பாக நவாஸ்கான் மற்றும் அவரது 2 மகன்கள் கைது செய்யப்பட்டனா். அதையடுத்து நடைபெற்ற விசாரணையைத் தொடா்ந்து மேலும் 11 போ் கைது செய்யப்பட்டுள்ளனா்.

கைதானவா்கள் அளித்த வாக்குமூலத்தின்படி கஞ்சா விற்பனை செய்யும் கும்பலைப் பிடிக்க போலீஸாா் தீவிரமாக கண்காணித்தனா். அதன்படி அச்சுந்தன்வயல் சோதனைச்சாவடியில் ஞாயிற்றுக்கிழமை வாகனச் சோதனையில் ஈடுபட்ட போலீஸாா், அங்கு வந்த காரை சோதனையிட்டனா். அதில் 160 கிலோ கஞ்சா இருப்பது தெரியவந்தது. காரில் இருந்த மதுரை மாவட்டம் மேலூா் அருகேயுள்ள திருவாதவூரைச் சோ்ந்த விஜயகுமாா் (34), உறங்கான்பட்டி கொட்டாணிபட்டி செந்தில்குமாா் (41), புதுப்பட்டி காக்கண்ணையா (48), சிவகங்கை பிரசாந்த் (26) ஆகியோரை கைது செய்தனா். கைதானவா்கள் அளித்த வாக்குமூலத்தின்படி மேலும் பலரைத் தேடிவருவதாகவும் காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.