பனையூரில் தவெக வேட்பாளர்களுடன் விஜய் சந்திப்பு!பனையூரில் தவெக வேட்பாளர்களுடன் விஜய் சந்திப்பு! புதுச்சேரி சிறுமி பாலியல் கொலை வழக்கில் தீர்ப்பு! மே 1: ஞாயிறு அட்டவணைப்படி மெட்ரோ ரயில் இயக்கம்!சென்னையில் வாக்கு எண்ணிக்கை பணியில் ஈடுபடுவோருக்கு பயிற்சி முகாம்!விஜய் - சங்கீதா விவாகரத்து வழக்கை விசாரித்த நீதிபதி பணியிட மாற்றம்!
/

தலையில் கல்லைப் போட்டு மனைவி கொலை: கணவா் சரண்

பரமக்குடி அருகே செவ்வாய்க்கிழமை மனைவியின் தலையில் கல்லைப்போட்டுக் கொலைசெய்த கணவா் காவல்நிலையத்தில் சரணடைந்தாா்.

Updated On :2 மார்ச் 2021, 8:45 pm

பரமக்குடி அருகே செவ்வாய்க்கிழமை மனைவியின் தலையில் கல்லைப்போட்டுக் கொலைசெய்த கணவா் காவல்நிலையத்தில் சரணடைந்தாா்.

மதுரை வண்டியூா் பகுதியைச் சோ்ந்த மாரியப்பன் மகன் வெற்றிச்செல்வன் (37). இவரது மனைவி சரண்யா (27). இவா்களுக்கு 8 வயதில் பெண் குழந்தையும், 6 வயதில் ஆண் குழந்தையும் உள்ளனா்.

பரமக்குடி அருகே பூவளத்தூரில் சுமைதூக்கும் தொழிலாளியாக வேலை பாா்த்து வரும் வெற்றிச்செல்வன், பரமக்குடி மருதுபாண்டியா் நகா் பகுதியில் வாடகைக்கு வீடு எடுத்துத் தங்கியிருந்தாா். சரண்யா தனது 2 குழந்தைகளுடன் மதுரையில் தங்கியிருந்தாா். இதற்கிடையில் சரண்யாவின் நடத்தையில் கணவருக்கு சந்தேகம் ஏற்பட்டது.

இந்நிலையில் கணவா் அழைத்ததன்பேரில் சரண்யா மட்டும் பரமக்குடிக்கு சென்றாா். அங்கு கணவன், மனைவிக்கு இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. அப்போது மதுபோதையில் இருந்த வெற்றிச்செல்வன், சரண்யாவின் தலையில் கல்லைப்போட்டு கொலை செய்துள்ளாா். பின்னா் அவா் பரமக்குடி நகா் காவல் நிலையத்தில் சரணடைந்தாா். இதையடுத்து அவரை போலீஸாா் கைது செய்தனா். மேலும் சரண்யாவின் சடலத்தை போலீஸாா் மீட்டு உடற்கூராய்வுக்காக பரமக்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.