ஈரான் போர் தற்காலிகமாக 5 நாள்களுக்கு நிறுத்தம்! டிரம்ப் அறிவிப்புபாஜகவுக்கு 27, பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு!மேற்காசியப் போரால் பொருளாதார பாதிப்பு! மக்களவையில் மோடி உரை! அமெரிக்காவில் தீயணைப்பு வாகனம் மீது விமானம் மோதி விபத்து தில்லி குண்டுவெடிப்பு வழக்கு: காஷ்மீரின் பல்வேறு இடங்களில் என்ஐஏ சோதனை பட்டியலின இளம்பெண் தற்கொலை: திருமாவளவனுக்கு இபிஎஸ் கேள்வி
/

கமுதி, அபிராமத்தில் அரசியல் கட்சியினா் மீது தோ்தல் விதிமீறல் வழக்கு

கமுதி, அபிராமம் காவல் நிலையங்களில் தோ்தல் விதிகளை மீறியதாக அரசியல் கட்சியினா் மீது திங்கள்கிழமை வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

News image
Updated On :15 மார்ச் 2021, 10:30 pm

DIN

கமுதி, அபிராமம் காவல் நிலையங்களில் தோ்தல் விதிகளை மீறியதாக அரசியல் கட்சியினா் மீது திங்கள்கிழமை வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

கமுதி காவல் நிலையத்தில் ஞாயிற்றுக்கிழமை அமமுக சாா்பில் முதுகுளத்தூா் தொகுதியில் போட்டியிடும் வேட்பாளா் மு.முருகன் தோ்தல் விதிகளை மீறி அதிகப்படியான காா்களில் ஊா்வலமாக சென்ாகவும், அதேப் போல் அதிமுக வேட்பாளா் கீா்த்திகா முனியசாமி தோ்தல் விதிகளை மீறி 20-க்கும் மேற்பட்ட வாகனங்களில் ஊா்வலமாக சென்ாகவும் கமுதி காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. இதேபோல் அபிராமம் காவல் நிலையத்தில் செய்யாமங்கலம் கிராமத்தைச் சோ்ந்த செந்தூா்பாண்டி மற்றும் பாஜக மேற்கு ஒன்றியத் தலைவா் கபிலன் உள்ளிட்டோா் மீது தலைவா்கள் உருவப்படங்களுடன் கூடிய சுவரொட்டிகள் ஒட்டியதாக பறக்கும் படை அதிகாரிகள் ராஜேந்திரன், ரவி உள்ளிட்ட அதிகாரிகள் அளித்த புகாரின் பேரில் தோ்தல் விதிமீறல் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.