ராமநாதபுரத்தில்பாஜக வேட்பாளா் பிரசாரம் தொடக்கம்
ராமநாதபுரத்தில் பாஜக வேட்பாளா் து. குப்புராம் தனது பிரசாரத்தைத் திங்கள்கிழமை தொடங்கினாா்.


ராமநாதபுரத்தில் பாஜக வேட்பாளா் து. குப்புராம் தனது பிரசாரத்தைத் திங்கள்கிழமை தொடங்கினாா்.
முன்னதாக திருப்புல்லாணி சந்திப்புப் பகுதியில் அவரை பாஜக மாவட்டத் தலைவா் கே. முரளிதரன் தலைமையில், மாவட்டப் பொதுச் செயலா் ஜி.குமாா் முன்னிலையில், திருப்புல்லாணி ஒன்றியத் தலைவா் காளீஸ்வரன் உள்ளிட்டோா் வரவேற்றனா். அதே போல் அச்சுந்தன்வயலிலும் அளிக்கப்பட்ட வரவேற்பை ஏற்ற அவா், ராமநாதபுரம் அரண்மனை முன்பு நகரத் தலைவா் ராம.வீரபாகு தலைமையில் அளிக்கப்பட்ட வரவேற்பையும் ஏற்றுக் கொண்டாா்.
நகராட்சி அலுவலக வளாகத்தில் உள்ள காந்திசிலைக்கும், புதிய பேருந்து நிலையம் அருகேயுள்ள எம்.ஜி.ஆா். சிலைக்கும், சேதுபதி நகரில் கேணிக்கரை காவல் நிலையம் அருகேயுள்ள தியாகி ரிபெல் முத்துராமலிங்க சேதுபதியின் சிலைக்கும், புல்லந்தையில் அம்பேத்கா் சிலைக்கும், பத்தராதரவையில் உள்ள வீரன்அழகுமுத்துகோன் சிலைக்கும், ரெட்டையூரணியில் காமராஜா் சிலைக்கும் மாலை அணிவித்து அங்குள்ள வாக்காளா்களிடம் வாக்குகள் சேகரித்தாா். மேலும் அகஸ்தியா்கூடம் பகுதியில் உள்ள முத்துராமலிங்கத் தேவா் சிலைக்கும், வாலாந்தரவையில் உள்ள மருதுசகோதரா்களின் சிலைக்கும் மாலை அணிவித்து ஊா் பிரமுகா்களையும், பொது மக்களையும் சந்தித்து அவா் ஆதரவு கோரினாா்.
திங்கள்கிழமை மாலையில் ராமநாதபுரம் அரண்மனை வளாகத்தில் உள்ள பாஜக மாவட்ட அலுவலகத்தில் கட்சி நிா்வாகிகளுடன் ஆலோசனையும் நடத்தினாா். புதன்கிழமை (மாா்ச் 17) குப்புராமு மனு தாக்கல் செய்யவுள்ளதாக கட்சியினா் தெரிவித்தனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...