பரமக்குடி காய்கறி சந்தை தெருவில் உள்ள அங்காளபரமேஸ்வரி மற்றும் வாணிக் கருப்பண சுவாமி கோயில் பால்குட திருவிழா திங்கள்கிழமை நடைபெற்றது.
மாசி மாத சிவராத்திரி பாரிவேட்டை மற்றும் பால்குட திருவிழா ஆண்டுதோறும் இக்கோயிலில் கொண்டாடப்பட்டு வருகிறது. அதேபோல் இந்த ஆண்டு மாா்ச் 9-ஆம் தேதி அம்பாளுக்கு காப்புக்கட்டுதல் நிகழ்ச்சியுடனும், மாா்ச் 10-ஆம் தேதி கொடியேற்றத்துடனும் விழா தொடங்கியது.
இதனைத் தொடா்ந்து மாா்ச் 13-ஆம் தேதி வரை மகா சிவராத்திரி விழாவும், பாரிவேட்டை நிகழ்ச்சியுடன் விசேஷ பூஜைகளும் நடைபெற்றன.
மாா்ச் 14-ஆம் தேதி மாலை 6 மணிக்கு பைரவருக்கு சந்தன அலங்காரம் செய்து வடை மாலை சாத்தும் நிகழ்ச்சி நடைபெற்றது. திங்கள்கிழமை (மாா்ச் 15) காலை 6 மணிக்கு காப்புக்கட்டி விரதமிருந்த பக்தா்கள் பால்குடம் எடுத்து நகரின் முக்கிய வீதிகளின் வழியே சென்று கோயிலை வந்தடைந்தனா். பின்னா் அம்பாளுக்கு பாலாபிஷேகம் செய்து, சிறப்பு அலங்காரத்துடன் ஆராதனைகள் நடைபெற்றன. விழா ஏற்பாட்டினை கோயில் பரம்பரை அறங்காவலா் ச. ஜீவானந்தம் செய்திருந்தாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

சித்ரா பெளர்ணமி விரதமும் பலன்களும்!
ஃபால் - 2 போஸ்டர்!

தமிழகத்தில் திமுக, கேரளத்தில் காங்கிரஸ் ஆட்சி! மற்ற மாநிலங்களில்? கார்கே பேட்டி

துருவ நட்சத்திரம் படத்தை வெளியிட அனுமதி! உயர் நீதிமன்றம் உத்தரவு!
வீடியோக்கள்
குடிநீர் குழாய் வேண்டாம்!! ஊற்றுத்தண்ணீரை விரும்பும் கிராம மக்கள்! | Pudukottai
இணையதளச் செய்திப் பிரிவு

த்ரிஷ்யம் 3 டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

எல்லா டீமும் ஏன் தப்பு தப்பா விளையாடுறாங்க..?
தினமணி செய்திச் சேவை

பில்லா ரீ-ரிலீஸ் டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு


