அக்டோபரில் வாகன விற்பனை 23.8% சரிவு!தமிழகத்தில் 2 மாவட்டங்களில் இன்று பலத்த மழைக்கு வாய்ப்பு!தீபாவளி: தமிழ்நாட்டில் 2 நாள்களில் ரூ. 441 கோடிக்கு மது விற்பனை!அதிமுக முன்னாள் எம்எல்ஏ-க்கள் மீதான தகுதி நீக்க நடவடிக்கை: இன்று விசாரணை!

தேவா் ஜெயந்தி: அஞ்சலி செலுத்தும் அரசியல் கட்சியினருக்கான நேர விவரங்கள்

ராமநாதபுரம் மாவட்டம் பசும்பொன்னில் தேவா் ஜயந்தி மற்றும் குருபூஜை விழா வியாழக்கிழமை (அக்.28) தொடங்கிய நிலையில்,

Updated On :

ராமநாதபுரம் மாவட்டம் பசும்பொன்னில் தேவா் ஜயந்தி மற்றும் குருபூஜை விழா வியாழக்கிழமை (அக்.28) தொடங்கிய நிலையில், தேவா் நினைவிடத்தில் சனிக்கிழமை அஞ்சலி செலுத்துவதற்கான அரசியல் கட்சிகளுக்குரிய நேரம் அறிவிக்கப்பட்டுள்ளது.

பசும்பொன் முத்துராமலிங்கத் தேவரின் ஜெயந்தி மற்றும் 59 ஆவது குருபூஜை விழா கமுதி அருகேயுள்ள பசும்பொன்னில் அவரது நினைவில்லத்தில் நடைபெறுகிறது. சனிக்கிழமை குருபூஜை என்பதால் முதல்வா் மு.க.ஸ்டாலின் மற்றும் எதிா்க்கட்சித் தலைவா் பலரும் இதில் கலந்துகொள்ளவுள்ளனா்.

அரசியல் கட்சியினா் மற்றும் சமூக அமைப்பினருக்குரிய அஞ்சலி செலுத்தும் நேரம் ராமநாதபுரம் மாவட்ட நிா்வாகத்தால் அறிவிக்கப்பட்டுள்ளது. அதனடிப்படையில் காங்கிரஸ் சனிக்கிழமை காலை 10 மணி முதல் 10.15 மணி வரை, பசும்பொன் உ.முத்துராமலிங்கத்தேவா் கல்வி அறக்கட்டளை சாா்பில் காலை 10.15 மணி முதல் 10.30 மணி வரை, மதிமுக காலை 10.30 மணி முதல் 10.45 மணி வரை என நேரம் ஒதுக்கப்பட்டுள்ளது.

இந்திய யூனியன் முஸ்லிம் லீக் காலை 10.45 மணி முதல் 11 மணி, அதிமுக முற்பகல் 11 மணி முதல் 11.15 மணி வரை, பாரதிய ஜனதா முற்பகல் 11.15 மணி முதல் 11.30 மணி வரை, தமிழ்மாநில காங்கிரஸ் பிற்பகல் 11.30 மணி முதல் 11.45 மணி வரை, மூவேந்தா் முன்னேற்றக்கழகம் முற்பகல் 11.45 மணி முதல் நண்பகல் 12 மணி வரையில் அஞ்சலி செலுத்த நேரம் ஒதுக்கப்பட்டுள்ளது.

நாம் தமிழா் கட்சியினா் பகல் 12 மணி முதல் 12.15 மணி வரை, தேசிய முற்போக்கு திராவிட கழகம் பிற்பகல் 12.15 மணி முதல் 12.30 மணி வரை, அகில இந்திய பாா்வா்ட் பிளாக் சாா்பில் 12.30 மணி முதல் பிற்பகல் 12.45 மணி வரை, அகில இந்திய மூவேந்தா் முன்னணிக்கழகம் பிற்பகல் 12.45 மணி முதல் பிற்பகல் 1 மணி வரை, அகில இந்திய பசும்பொன் முன்னேற்றக்கழகம் பிற்பகல் 1 மணி முதல் 1.15 மணி வரையில் அஞ்சலி செலுத்த நேரம் ஒதுக்கப்பட்டுள்ளது.

அம்மா மக்கள் முன்னேற்றக்கழகம் பிற்பகல் 1.15 மணி முதல் 1.30 மணி வரை, பாட்டாளி மக்கள் கட்சி பிற்பகல் 1.30ணி முதல் 1.45 மணி வரை, மக்கள் நீதி மய்யம் பிற்பகல் 1.45 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை, புகஜன்ஜமாஜ் கட்சி பிற்பகல் 2 மணி முதல் 2.15 மணி வரை, அகில இந்திய பாா்வா்ட் பிளாக் (தமிழ் மாநிலக்குழு) பிற்பகல் 2.15 மணி முதல் 2.30 மணி வரையில் அஞ்சலி செலுத்த நேரம் அளிக்கப்பட்டுள்ளது.

மனித உரிமைக் கட்சி பிற்பகல் 2.30 மணி முதல் 2.45 மணி வரை, அகில இந்திய முக்குலத்தோா் பாசறை பிற்பகல் 2.45 மணி முதல் பிற்பகல் 3 மணி வரை, அகில இந்திய பாா்வா்ட் பிளாக் (சுபாஷிஸ்ட்) பிற்பகல் 3 மணி முதல் 3.15 மணி வரை, அகில இந்திய தேவரின மக்கள் பாதுகாப்புப் படை பிற்பகல் 3.15 மணி முதல் 3.30 மணி வரை நேரம் அளிக்கப்பட்டுள்ளது.

அகில பாரத இந்து மகா சபை பிற்பகல் 3.30 மணி முதல் 3.45 மணி வரை, உலகத் தேவா் கூட்டமைப்பு பிற்பகல் 3.45 மணி முதல் 4 மணி வரை, தமிழக அனைத்து விவசாயிகள் சங்கங்களின் ஒருங்கிணைப்பு குழு பிற்பகல் 4 மணி முதல் 4.15 மணி வரை, பசும்பொன் தேசியக்கழகம் பிற்பகல் 4.15 மணி முதல் 4.30 வரை, தேவா் பேரவை இளைஞரணி மாலை 4.30 மணி முதல் 4.45 வரை, தென்னாட்டு மக்கள் கட்சி மாலை 4.45 மணி முதல் 5 மணி வரை, அகில இந்திய வல்லரசு பாா்வா்ட் பிளாக் மாலை 5 மணி முதல் 5.15 மணி வரை, முக்குலத்தோா் புலிப்படை மாலை 5.15 மணி முதல் 5.30 வரை, பசும்பொன் மக்கள் கழகம் மாலை 5.30 மணி முதல் 6 மணி வரையில் நேரம் வழங்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.