ஃபேஷனுக்காக பெரியாரை கொள்கைத் தலைவராக வைத்துள்ளது தவெக! ஜோசியத்தை நம்பியே ஆட்சி! மு.க. ஸ்டாலின்ஷேக் ஹசீனா கட்சியினருக்கு எதிராக வன்முறை! 30 வீடுகளுக்குத் தீவைப்பு!ஐஐடி மாணவர்களுக்கு இணையான அங்கீகாரம் ஐடிஐ மாணவர்களுக்கு கிடைக்கும்: மோடிகள்ளக்குறிச்சி எம்எல்ஏ விவகாரத்தில் இன்னும் எதற்காக மௌனம் காக்கிறார் முதல்வர்? டிடிவி தினகரன் கேள்வி தங்கம் விலை சரிவு; வணிகர்களை நஷ்டத்தில் இருந்து காப்பாற்றிய பிரதமர் மோடி: பாஜக பெருமிதம்! தவெக ஆட்சியில் டெல்டா விவசாயிகள் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளனர்: எடப்பாடி பழனிசாமி வானிலை: சென்னையில் நாளை(நவ.23) கனமழைக்கு வாய்ப்பு! பஹ்ரைனில் உள்ள அமெரிக்க தளவாடங்கள் மீது ஈரான் தாக்குதல்!

ஆசிய கோப்பை: இந்தியா ஏ அணிக்கு 314 ரன்கள் இலக்கு நிர்ணயித்த பாகிஸ்தான் ஏ அணி!

ஆசிய கோப்பை ரைசிங் ஸ்டார்ஸ் கிரிக்கெட் தொடரில் இந்தியா ஏ அணிக்கு எதிரானப் போட்டியில் முதலில் விளையாடிய பாகிஸ்தான் ஏ அணி 313 ரன்களுக்கு ஆட்டமிழந்தது.

படம் | பிசிசிஐ

Updated On :

ஆசிய கோப்பை ரைசிங் ஸ்டார்ஸ் கிரிக்கெட் தொடரில் இந்தியா ஏ அணிக்கு எதிரானப் போட்டியில் முதலில் விளையாடிய பாகிஸ்தான் ஏ அணி 313 ரன்களுக்கு ஆட்டமிழந்தது.

ஆசிய கோப்பை ரைசிங் ஸ்டார்ஸ் கிரிக்கெட் தொடரில் கத்தாரில் வெஸ்ட் எண்ட் பார்க் திடலில் நடைபெற்று வரும் இன்றையப் போட்டியில் இந்தியா ஏ மற்றும் பாகிஸ்தான் ஏ அணிகள் விளையாடி வருகின்றன. இந்தப் போட்டியில் டாஸ் வென்ற பாகிஸ்தான் ஏ அணி பேட்டிங்கைத் தேர்வு செய்து முதலில் விளையாடியது.

மூவர் அரைசதம்; இந்தியா ஏ அணிக்கு 314 ரன்கள் இலக்கு!

டாஸ் வென்று முதலில் விளையாடிய பாகிஸ்தான் ஏ அணி 49.2 ஓவர்களில் 313 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தது.

பாகிஸ்தான் அணியில் அதிகபட்சமாக ஹாசன் நவாஸ் 82 பந்துகளில் 79 ரன்கள் எடுத்தார். அதில் 5 பவுண்டரிகள் மற்றும் 4 சிக்ஸர்கள் அடங்கும். அவரைத் தொடர்ந்து, மாஸ் சதாஹத் 59 ரன்கள், ஃபர்ஹான் யூசஃப் 56 ரன்கள், ஷமில் ஹுசைன் 33 ரன்கள் எடுத்தனர். கேப்டன் அப்துல் சமத் 28 ரன்கள் எடுத்தார். மற்ற வீரர்கள் பெரிதாக ரன்கள் குவிக்கவில்லை.

இந்தியா ஏ தரப்பில் ஹர்ஷித் ராணா, பிரின்ஸ் யாதவ், சூர்யான்ஷ் ஷெட்ஜ் மற்றும் விப்ராஜ் நிகம் தலா இரண்டு விக்கெட்டுகளைக் கைப்பற்றினர். ஆயுஷ் பதோனி ஒரு விக்கெட்டினைக் கைப்பற்றினார்.

314 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி இந்திய அணி விளையாடி வருகிறது.

Summary

In the match against India A during the Asia Cup 'Rising Stars' cricket tournament, Pakistan A batted first and were all out for 313 runs.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.