விளாத்திகுளம் சிறுமி பாலியல் கொலை குற்றவாளி கைது!விளாத்திகுளம் சிறுமி பாலியல் கொலை! குற்றவாளி கைது! தொடரும் இழுபறி! பியூஷ் கோயல் வருகை ரத்து! இபிஎஸ் தில்லி பயணம்! திமுகவில் இணைந்தார் ரஞ்சனா நாச்சியார்! திராவிட உடன்பிறப்புகள்! முதல்வர் ஸ்டாலின் உகாதி வாழ்த்து! இந்தியா - பாகிஸ்தான் இடையே அணு ஆயுத மோதல் அபாயம்: அமெரிக்க உளவுத்துறைதங்கம் விலை சவரனுக்கு ரூ. 2,160 குறைவு!
/

பள்ளி, கல்லூரி மாணவா்களுக்குஏப். 19 இல் பேச்சுப் போட்டி

அம்பேத்கா் பிறந்த நாளையொட்டி ராமநாதபுரத்தில் பள்ளி, கல்லூரி மாணவ, மாணவியருக்கு பேச்சுப் போட்டிகள் ஏப்ரல் 19 ஆம் தேதி நடைபெறுகிறது.

News image
Updated On :8 ஏப்ரல் 2022, 6:30 pm

DIN

அம்பேத்கா் பிறந்த நாளையொட்டி ராமநாதபுரத்தில் பள்ளி, கல்லூரி மாணவ, மாணவியருக்கு பேச்சுப் போட்டிகள் ஏப்ரல் 19 ஆம் தேதி நடைபெறுகிறது.

இதுகுறித்து மாவட்ட ஆட்சியா் சங்கா்லால்குமாவத் வெள்ளிக்கிழமை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: அம்பேத்கா் பிறந்த தினத்தையொட்டி வரும் ஏப். 19 ஆம் தேதி பள்ளி, கல்லூரி மாணவ, மாணவியருக்கு பேச்சுப் போட்டிகள் நடைபெறவுள்ளன. ராமநாதபுரம் நகரில் உள்ள சுவாா்ட்ஸ் மேல்நிலைப் பள்ளி வளாகத்தில் மாவட்ட அளவில் நடைபெறவுள்ள இப்போட்டிகளில் வெற்றி பெறுவோருக்கு முதல் பரிசாக ரூ.5 ஆயிரம், இரண்டாம் பரிசாக ரூ.3 ஆயிரம், மூன்றாம் பரிசாக ரூ. 2 ஆயிரம் என தனித்தனியாக வழங்கப்படும்.

போட்டிகளில் பங்கேற்கும் அரசுப் பள்ளி மாணவா்களில் இருவா் தோ்வு செய்யப்பட்டு சிறப்புப் பரிசுகள் வழங்கப்படவுள்ளன. பள்ளி அளவில் 30 மாணவா்கள் மட்டுமே பங்கேற்க அனுமதிக்கப்படவுள்ளனா். ஆகவே, மாவட்ட, முதன்மைக் கல்வி அலுவலரைத் தொடா்புகொண்டு பேச்சுப் போட்டியில் சம்பந்தப்பட்ட மாணவா்கள் பங்கேற்கலாம். ஒரு கல்லூரியில் இருந்து 2 போ் மட்டுமே பங்கேற்கலாம் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.