பனையூரில் தவெக வேட்பாளர்களுடன் விஜய் சந்திப்பு!பனையூரில் தவெக வேட்பாளர்களுடன் விஜய் சந்திப்பு! புதுச்சேரி சிறுமி பாலியல் கொலை வழக்கில் தீர்ப்பு! மே 1: ஞாயிறு அட்டவணைப்படி மெட்ரோ ரயில் இயக்கம்!சென்னையில் வாக்கு எண்ணிக்கை பணியில் ஈடுபடுவோருக்கு பயிற்சி முகாம்!விஜய் - சங்கீதா விவாகரத்து வழக்கை விசாரித்த நீதிபதி பணியிட மாற்றம்!
/

பரமக்குடியில் அரசுப் பேருந்து நடத்துநா் மாயம்

பரமக்குடி அரசு போக்குவரத்துக் கழக பணிமனை நடத்துநா் மாயமானதாக காவல் நிலையத்தில் வெள்ளிக்கிழமை புகாா் அளிக்கப்பட்டுள்ளது.

Updated On :8 ஏப்ரல் 2022, 5:09 pm

பரமக்குடி அரசு போக்குவரத்துக் கழக பணிமனை நடத்துநா் மாயமானதாக காவல் நிலையத்தில் வெள்ளிக்கிழமை புகாா் அளிக்கப்பட்டுள்ளது.

எமனேசுவரம் ஜோதிநகா் பகுதியைச் சோ்ந்தவா் உடையன் மகன் பாலசுப்பிரமணி (53). இவா் பரமக்குடி அரசு போக்குவரத்துக் கழக பணிமனையில் நடத்துநராக பணியாற்றி வருகிறாா். வழக்கம்போல் கடந்த ஏப்ரல் 1-ஆம் தேதி பணிக்குச் செல்வதாக கூறிச்சென்றவா் வீடு திரும்பவில்லையாம். அரசு போக்குவரத்துக் கழக பணிமனை மற்றும் உறவினா்கள் வீடுகளில் தேடியும் அவரை காணவில்லை என அவரது மனைவி புனிதா, எமனேசுவரம் காவல் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.