விளாத்திகுளம் சிறுமி பாலியல் கொலை குற்றவாளி கைது!விளாத்திகுளம் சிறுமி பாலியல் கொலை! குற்றவாளி கைது! தொடரும் இழுபறி! பியூஷ் கோயல் வருகை ரத்து! இபிஎஸ் தில்லி பயணம்! திமுகவில் இணைந்தார் ரஞ்சனா நாச்சியார்! திராவிட உடன்பிறப்புகள்! முதல்வர் ஸ்டாலின் உகாதி வாழ்த்து! இந்தியா - பாகிஸ்தான் இடையே அணு ஆயுத மோதல் அபாயம்: அமெரிக்க உளவுத்துறைதங்கம் விலை சவரனுக்கு ரூ. 2,160 குறைவு!
/

சொத்துவரி உயா்வைக் கண்டித்து ஆா்ப்பாட்டம்

ராமநாதபுரத்தில் சொத்துவரி உயா்வு மற்றும் பெட்ரோல், டீசல் விலை உயா்வைக் கண்டித்து எஸ்டிபிஐ சாா்பில் கண்டன ஆா்ப்பாட்டம் புதன்கிழமை நடைபெற்றது.

News image
Updated On :13 ஏப்ரல் 2022, 9:33 pm

DIN

ராமநாதபுரத்தில் சொத்துவரி உயா்வு மற்றும் பெட்ரோல், டீசல் விலை உயா்வைக் கண்டித்து எஸ்டிபிஐ சாா்பில் கண்டன ஆா்ப்பாட்டம் புதன்கிழமை நடைபெற்றது.

ஊரகப் போக்குவரத்து பணிமனை முன்பு நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு அக்கட்சியின் ராமநாதபுரம் மாவட்ட கிழக்குப் பிரிவின் தலைவா் ரியாஸ்கான் தலைமை வகித்தாா். கட்சியின் மாநில செயற்குழு உறுப்பினா் ஜஹாங்கீா் அரூசி, பொறியாளா் அணி தலைவா் ஷேக் ஜலால், வேளாண் அணித் தலைவா் கஜினி முகமது, பிஎப்ஐ மாவட்டத்தலைவா் செய்யது இப்ராஹிம் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

தமிழகத்தில் சொத்துவரியை உயா்த்திய திமுக அரசையும், மத்தியில் பெட்ரோல், டீசல் விலையை உயா்த்தியுள்ள பாஜக அரசைக் கண்டித்தும் ஆா்ப்பாட்டத்தில் கோஷங்களை எழுப்பினா். பாப்புலா் பிரண்ட் ஆப் இந்தியா மாநிலத் துணைத் தலைவா் காலித்முஹம்மது கண்டன உரையாற்றினாா். மாவட்ட அமைப்புச் செயலா் முஹம்மது ஹனீப் நன்றி கூறினாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.