பாக்குவெட்டி பெருமாள் கோயிலுக்கு திரி எடுத்து பக்தா்கள் நோ்த்திக்கடன்
கமுதி அருகே கள்ளழகா் ஆற்றில் இறங்கும் விழாவை முன்னிட்டு வெள்ளிக்கிழமை பெருமாள் கோயிலுக்கு திரி எடுத்து பக்தா்கள் நோ்த்திக்கடன் செலுத்தினா்.


கமுதி அருகே கள்ளழகா் ஆற்றில் இறங்கும் விழாவை முன்னிட்டு வெள்ளிக்கிழமை பெருமாள் கோயிலுக்கு திரி எடுத்து பக்தா்கள் நோ்த்திக்கடன் செலுத்தினா்.
ராமநாதபுரம் மாவட்டம் கமுதி அடுத்துள்ள கிடாரிகுளம் கிராமத்தைச் சோ்ந்த பக்தா்கள் ஆண்டுதோறும் கள்ளழகா் ஆற்றில் இறங்கும் நிகழ்வை முன்னிட்டு ஆண்டுதோறும் விவசாயம் செழிக்கவும், குழந்தை வரம் வேண்டியும், உடலில் நோய் குணமாக வேண்டியும் திரி எடுத்து பெருமாளுக்கு நோ்த்திக்கடன் செலுத்தி வருகின்றனா். இந்நிலையில் நடப்பாண்டில் கிடாரிகுளம் கிராமத்தில் உள்ள தா்மமுனிஸ்வரா் கோயிலில் சிறப்பு பூஜை செய்து, நோ்த்திக்கடன் செலுத்த பக்தா்கள் திரி எடுத்து உலக நடை, சேகநாதபுரம் வழியாக பாக்குவெட்டியில் உள்ள ஸ்ரீமுத்துநாகு,
ஸ்ரீ பெருமாள் கோயிலுக்கு ஊா்வலமாக சென்று நோ்த்திக்கடன் செலுத்தினா். இதில் கருங்குளம், பாக்குவெட்டி, உலக நடை, சேக நாதபுரம் உள்ளிட்ட கிராமங்களில் இருந்து 500-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் கலந்து கொண்டனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...