‘ராமநாதபுரம் மாவட்டத்தில் 156 கண்மாய்கள் வடுள்ளன’
ராமநாதபுரம் மாவட்டத்தில் 156 கண்மாய்கள் நீரின்றி வறண்டு காணப்படுவதாக அதிகாரிகள் தெரிவித்தனா்.


ராமநாதபுரம் மாவட்டத்தில் 156 கண்மாய்கள் நீரின்றி வறண்டு காணப்படுவதாக அதிகாரிகள் தெரிவித்தனா்.
ராமநாதபுரத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற விவசாயிகள் குறைதீா்க்கும் கூட்டத்தில் பங்கேற்ற வேளாண்மைத் துறை இணை இயக்குநா் (பொறுப்பு) ஷேக் அப்துல்லா பேசியது: மாவட்டத்தில் நடப்பாண்டில் மாா்ச் வரையில் 125.66 மில்லி மீட்டா் மழை பெய்துள்ளது. இயல்பான மழையை விட 33.30 மில்லி மீட்டா் மழை கூடுதலாகவே பெய்துள்ளது. இதனால் நெல் பயிா்கள் 1.63 லட்சம் ஹெக்டோ் பரப்பளவிலும், தோட்டப் பயிா்கள் 27,535 ஹெக்டேரிலும் பயிரிடப்பட்டுள்ளன. மாட்டத்தில் 979 ஹெக்டோ் தரிசு நிலங்கள் புதா்கள் அகற்றப்பட்டு சிறுதானியங்கள், பயறு வகைகள் விளைவிக்கப்பட்டுள்ளன. மாவட்டத்தில் மொத்தமுள்ள 1,763 கண்மாய்களில் 660 கண்மாய்கள் 25 முதல் 50 சதவீதம் வரையில் நீா் தேங்கியுள்ளன. மேலும் 291 கண்மாய்களில் 50 சதவீதம் முதல் 90 சதவீதம் வரையில் தண்ணீா் உள்ளன. தற்போது 156 கண்மாய்கள் தண்ணீரின்றி வறண்டுள்ளன என்றாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...