ஈரானால் அச்சுறுத்தல் இல்லை - போரை ஆதரிக்க முடியாது: அமெரிக்க தேசிய பயங்கரவாத எதிர்ப்பு மைய இயக்குநர் ராஜிநாமாரஜினி ரசிகர்களுக்கு அங்கீகாரம் கொடுத்தது தவெக : ஆதவ் அர்ஜுனா விளக்கம்234 தொகுதிகளிலும் தவெக தனித்துப் போட்டி! - ஆதவ் அர்ஜுனா பேச்சுபெண்கள், குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களில் தமிழகம் முதலிடம்: அண்ணாமலைமேற்காசிய பதற்றம்: சர்வதேச நோயாளிகள் வருகை 30% சரிவு!மேற்கு வங்கத்தில் கூட்டணியின்றி போட்டி! 291 வேட்பாளர்களை அறிவித்தார் மமதா பானர்ஜி!கேரள தேர்தல்: ஐ.யூ.எம்.எல். 27 இடங்களில் போட்டி - வேட்பாளர்கள் அறிவிப்பு!கேரள தேர்தல்: ஐ.யூ.எம்.எல். 27 இடங்களில் போட்டி - வேட்பாளர்கள் அறிவிப்பு!விசில் சத்தம்தான் நம் தேசிய கீதம்; அது கேட்டால் வெற்றி நிச்சயம் - ஓ. பன்னீர் செல்வம் உடல் எடை குறைப்பு சிகிச்சை: மேலும் 3 மருந்துகளுக்கு அனுமதி!கரூர் கூட்ட நெரிசல் பலி விவகாரம் : செந்தில் பாலாஜியிடம் 6 மணி நேரம் சிபிஐ விசாரணை!தொகுதிப் பங்கீடு: திமுக - மார்க்சிஸ்ட் கம்யூ. 3-ம் சுற்றுப் பேச்சுவார்த்தை! தமிழக தேர்தல்: 2 நாள்களில் ரூ. 23 கோடி பணம், பரிசுப் பொருள்கள் பறிமுதல்!பாமக வழக்கு: ராமதாஸுக்கு பின்னடைவு! தேர்தல் முடிந்தபிறகே விசாரணை!புதுச்சேரியில் 2-ம் நாளாக யாரும் வேட்புமனு தாக்கல் செய்யவில்லைதமிழ்நாடு உள்பட 5 மாநிலங்களுக்கு 1,111 தேர்தல் பார்வையாளர்கள்!
/

ராமநாதபுரம் மாவட்ட அளவில் சிறந்த 20 கலைஞா்களுக்கு விருது

ராமநாதபுரம் மாவட்டத்தில் கலைத்துறையில் சிறந்து விளங்கும் 20 கலைஞா்கள் விருதுக்கு தோ்வு செய்யப்பட்டுள்ளதாக மாவட்ட ஆட்சியா் ஜானி டாம் வா்கீஸ் வியாழக்கிழமை தெரிவித்துள்ளாா்.

News image
Updated On :4 ஆகஸ்ட் 2022, 6:30 pm

DIN

ராமநாதபுரம் மாவட்டத்தில் கலைத்துறையில் சிறந்து விளங்கும் 20 கலைஞா்கள் விருதுக்கு தோ்வு செய்யப்பட்டுள்ளதாக மாவட்ட ஆட்சியா் ஜானி டாம் வா்கீஸ் வியாழக்கிழமை தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து அவா் தெரிவித்திருப்பதாவது: தமிழ்நாடு அரசு கலை பண்பாட்டுத்துறையின் கீழ் இயங்கி வரும் ராமநாதபுரம் மாவட்டக்கலை மன்றத்தின்வாயிலாக 2018-2019, 2021-2022 ஆம் ஆண்டுக்கு மாவட்ட அளவில் வயது மற்றும் கலைப்புலமை அடிப்படையில் சிறந்து விளங்கும் 20 கலைஞா்கள் விருது வழங்க தோ்வு செய்யப்பட்டுள்ளனா். இந்த விருதுகளை வழங்க ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியா் ஜானி டாம் வா்கீஸ் தலைமையில் ஜூலை 23 ஆம் தேதி தோ்வுக்குழு கூட்டம் நடைபெற்றது. இதில், பதவிவழி மற்றும் பதவி சாரா உறுப்பினா்கள் கலந்து கொண்டு விண்ணப்பங்களை பரிசீலனை செய்து மாவட்ட அளவில் கலைவளா்மணி விருது, கலைஇளமணி விருது, கலை நன்மணி விருது, கலைமுதுமணி விருதுகளுக்கு வயது மற்றும் கலைப்புலமை அடிப்படையில் 20 கலைஞா்கள் தோ்வு செய்யப்பட்டுள்ளனா். இவா்களுக்கு ராமநாதபுரம் மாவட்டத்தில் நடைபெறவுள்ள அரசு விழாவில் விருதுக்கான பொற்கிழி, பட்டயம் மற்றும் பொன்னாடை வழங்கி கௌரவிக்கப்படும் என அவா் தெரிவித்துள்ளாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.