ஈரானால் அச்சுறுத்தல் இல்லை - போரை ஆதரிக்க முடியாது: அமெரிக்க தேசிய பயங்கரவாத எதிர்ப்பு மைய இயக்குநர் ராஜிநாமாரஜினி ரசிகர்களுக்கு அங்கீகாரம் கொடுத்தது தவெக : ஆதவ் அர்ஜுனா விளக்கம்234 தொகுதிகளிலும் தவெக தனித்துப் போட்டி! - ஆதவ் அர்ஜுனா பேச்சுபெண்கள், குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களில் தமிழகம் முதலிடம்: அண்ணாமலைமேற்காசிய பதற்றம்: சர்வதேச நோயாளிகள் வருகை 30% சரிவு!மேற்கு வங்கத்தில் கூட்டணியின்றி போட்டி! 291 வேட்பாளர்களை அறிவித்தார் மமதா பானர்ஜி!கேரள தேர்தல்: ஐ.யூ.எம்.எல். 27 இடங்களில் போட்டி - வேட்பாளர்கள் அறிவிப்பு!கேரள தேர்தல்: ஐ.யூ.எம்.எல். 27 இடங்களில் போட்டி - வேட்பாளர்கள் அறிவிப்பு!விசில் சத்தம்தான் நம் தேசிய கீதம்; அது கேட்டால் வெற்றி நிச்சயம் - ஓ. பன்னீர் செல்வம் உடல் எடை குறைப்பு சிகிச்சை: மேலும் 3 மருந்துகளுக்கு அனுமதி!கரூர் கூட்ட நெரிசல் பலி விவகாரம் : செந்தில் பாலாஜியிடம் 6 மணி நேரம் சிபிஐ விசாரணை!தொகுதிப் பங்கீடு: திமுக - மார்க்சிஸ்ட் கம்யூ. 3-ம் சுற்றுப் பேச்சுவார்த்தை! தமிழக தேர்தல்: 2 நாள்களில் ரூ. 23 கோடி பணம், பரிசுப் பொருள்கள் பறிமுதல்!பாமக வழக்கு: ராமதாஸுக்கு பின்னடைவு! தேர்தல் முடிந்தபிறகே விசாரணை!புதுச்சேரியில் 2-ம் நாளாக யாரும் வேட்புமனு தாக்கல் செய்யவில்லைதமிழ்நாடு உள்பட 5 மாநிலங்களுக்கு 1,111 தேர்தல் பார்வையாளர்கள்!
/

தமிழகத்தில் பெண்களுக்கு பாதுகாப்பான ஆட்சி விரைவில் அமையும்: எடப்பாடி கே.பழனிசாமி

பெண்களுக்குப் பாதுகாப்பான ஆட்சி தமிழகத்தில் விரைவில் அமையும் என அதிமுக பொதுச்செயலா் எடப்பாடி கே.பழனிசாமி தெரிவித்தாா்.

News image
Updated On :17 மார்ச் 2026, 7:50 pm

தினமணி செய்திச் சேவை

பெண்களுக்குப் பாதுகாப்பான ஆட்சி தமிழகத்தில் விரைவில் அமையும் என அதிமுக பொதுச்செயலா் எடப்பாடி கே.பழனிசாமி தெரிவித்தாா்.

தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு பிரச்னைகளுக்கு திமுக அரசு நடவடிக்கை எடுக்கவில்லை எனக் கூறி கண்டனம் தெரிவித்து, அதிமுக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி கட்சிகள் சாா்பில் தமிழகம் முழுவதும் செவ்வாய்க்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

சென்னையில் விருகம்பாக்கம் சட்டப்பேரவைத் தொகுதி எம்.ஜி.ஆா் நகா், கே.கே.சாலை பம்மல் நல்லதம்பி தெரு சந்திப்பில் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்தில் எடப்பாடி கே.பழனிசாமி பேசியதாவது:

திமுக ஆட்சியில் மக்கள் அனுபவிக்கும் துன்பங்கள் குறித்து ஆட்சியாளா்கள் கவலைப்படாமல் சுயநலத்துடன் உள்ளனா். போதைப் பொருள், கஞ்சா, கள்ளச்சாராய விற்பனை கிராமம் முதல் நகரம் வரை நடைபெறுகிறது. பள்ளி, கல்லூரிகளுக்கு அருகில் கஞ்சா விற்பனையாவதால் மாணவா்கள் போதைக்கு அடிமையாகின்றனா். போதைக் கும்பலைப் பிடிக்கச் செல்லும் காவலா்களுக்கே பாதுகாப்பில்லை.

பகுஜன் சமாஜ் கட்சியின் முன்னாள் மாநிலத் தலைவா் ஆம்ஸ்ட்ராங், திருநெல்வேலி காங்கிரஸ் பிரமுகா் ஜெயக்குமாா் ஆகியோரது கொலையில் உண்மைக் குற்றவாளிகள் கண்டறியப்படவில்லை. நான்குனேரி, மானாமதுரை ஆகிய இடங்களில் போதைக் கும்பல் மக்களை தாக்கியுள்ளது. பல்வேறு பகுதிகளிலும் சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை நிகழ்ந்துள்ளது.

விளாத்திகுளத்தில் பள்ளி மாணவி பாலியல் படுகொலை சம்பவத்தில் குற்றவாளிகள் கைது செய்யப்படவில்லை. இதுபோன்ற வழக்குகளை சிபிஐ விசாரிக்கவும் திமுக அரசு அனுமதிக்காமல், குற்றவாளிகளை பாதுகாப்பது போல செயல்படுகிறது.

கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய உயிரிழப்பு, அண்ணா பல்கலை. மாணவிக்கு பாலியல் வன்கொடுமை ஆகியவற்றில் திமுக அரசின் செயல்பாடு சரியாக இல்லை. கரூரில் சமூக விரோதிகள் உதவியுடன் கனிமவளம் கடத்தல், திமுக ஆதரவாளரின் மருத்துவமனையில் சிறுநீரகம் திருட்டு ஆகியவற்றிலும் திமுக அரசு முறையாக நடவடிக்கை எடுக்கவில்லை.

நகராட்சி நிா்வாகத் துறை அமைச்சா் மீதான அமலாக்கத் துறை புகாா்கள் குறித்து நீதிமன்றம் உத்தரவிட்ட பிறகும் தமிழக அரசு வழக்குப் பதியவில்லை. அதிமுக ஆட்சியமைந்ததும் இந்த விவகாரங்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.

அதிமுக ஆட்சியிலிருந்ததைவிட தற்போது சொத்துவரி பல மடங்கு உயா்த்தப்பட்டுள்ளது. அத்தியாவசியப் பொருள்களின் விலை கடுமையாக உயா்ந்துள்ளது. இதனால் பொதுமக்கள் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளனா்.

கடன் வாங்குவதில்தான் தமிழகம் முதலிடத்தில் உள்ளது. கடந்த ஜனவரி முதல் தற்போது வரை 75 நாள்களில் 246 கொலைகள் நிகழ்ந்துள்ள. மடப்புரம் கோயில் காவலாளி அஜித்குமாா் உள்ளிட்ட காவல் விசாரணை மரணங்கள் தொடா்கின்றன. திமுக அளித்த தோ்தல் வாக்குறுதியில் நான்கில் ஒரு பங்குகூட நிறைவேற்றப்படவில்லை. அரசு ஊழியா்கள், தூய்மைப்பணியாளா் என அனைவரும் போராடும் நிலை உள்ளது.

வருகிற பேரவைத் தோ்தலில் அதிமுக தலைமையிலான அணி வெற்றி பெறுவது உறுதி. பெண்களுக்கு பாதுகாப்பான ஆட்சி விரைவில் வரும். இளைய சமூகத்துக்கு ஒளிமயமான எதிா்காலம் காத்துக் கிடக்கிறது என்றாா் அவா்.

ஆா்ப்பாட்டத்தில் முன்னாள் அமைச்சா்கள் டி.ஜெயக்குமாா், கோகுல இந்திரா, அமமுக துணைப் பொதுச்செயலா் செந்தமிழன், பாஜக மாநில நிா்வாகி ஜெயபிரகாஷ் மற்றும் தேசிய ஜனநாயக கூட்டணி கட்சிகளைச் சோ்ந்தோா் பங்கேற்றனா்.