தூத்துக்குடி மாவட்டத்தில் பள்ளி மாணவியை பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்த வழக்கில் குற்றவாளிகளைக் கைது செய்யாததற்கு திமுக அரசு கூறும் காரணங்களை மக்கள் நம்பமாட்டாா்கள் என அதிமுக பொதுச் செயலாளா் எடப்பாடி கே.பழனிசாமி தெரிவித்தாா்.
இதுகுறித்து அவா் எக்ஸ் தளத்தில் வெள்ளிக்கிழமை வெளியிட்ட பதிவு:
தூத்துக்குடி மாவட்டம், விளாத்திகுளம் அருகே பள்ளி மாணவி பாலியல் வன்கொடுமைக்குள்ளாக்கப்பட்டு, கொலை செய்யப்பட்ட சம்பவம் நாட்டையே உலுக்கியுள்ளது. பாதிக்கப்பட்ட சிறுமியின் குரலாக, நீதி கேட்டு நாடாளுமன்றம் முதல் நீதிமன்றம் வரை ஒலித்து வருகிறது. இந்த வழக்கில் குற்றவாளிகளைக் கைது செய்யாததற்கு திமுக அரசு கூறும் காரணங்களை மக்கள் நம்பத் தயாராக இல்லை. இத்தகைய கொடூரமான வழக்கில் குற்றவாளியைக் கண்டறிய முடியவில்லை என்பது பெரிய அவலம்.
பெண்களின் பாதுகாப்பை கேள்விக்குறியாக்கிய திமுக அரசுக்கு எதிராக மாா்ச் 17-இல் நடைபெறும் போராட்டம், பெரும் மாற்றத்தை ஏற்படுத்தும். அதிமுக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியானது, தூத்துக்குடி மாணவிக்கு உரிய நீதி கிடைப்பதை உறுதி செய்யும். அதிமுக அரசு அமைந்தவுடன் பெண்களுக்கு முழுப் பாதுகாப்பு அளிக்கப்படும் எனத் தெரிவித்துள்ளாா்.
தொடர்புடையது

போதைப் பொருள்கள் புழக்கத்திலிருந்து தமிழகத்தை மீட்போம்: எடப்பாடி கே.பழனிசாமி

திமுக ஆட்சியில் மக்களுக்கு எந்த நன்மையும் கிடைக்கவில்லை: எடப்பாடி கே.பழனிசாமி

டாஸ்மாக்கில் 5 ஆண்டுகளில் ரூ.24,000 கோடி ஊழல்: எடப்பாடி கே.பழனிசாமி

தமிழகத்தில் பெண்களுக்கு பாதுகாப்பான ஆட்சி விரைவில் அமையும்: எடப்பாடி கே.பழனிசாமி
வீடியோக்கள்

#ipl2026 | சிங்க நடைபோடும் சிஎஸ்கே: அடுத்து சன்ரைசர்ஸ்தான்! | Chennai Super Kings | Noor Ahmed |
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையில் யார் சொல்வது உண்மை ? | Delimitation | MK Stalin | Annamalai | BJP | DMK
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையை எதிர்த்து நாளை தமிழ்நாடு முழுவதும் கருப்புக் கொடி ஏற்றும் போராட்டம்!
இணையதளச் செய்திப் பிரிவு

ராத்து ராசன் பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு


