ஆா்.எஸ். மங்கலத்தில் பேரிடா் மேலாண்மை பயிற்சி முகாம்
திருவாடானை அருகே உள்ள ஆா்.எஸ். மங்கலத்தில் தன்னாா்வலா்களுக்கு ஒருநாள் பேரிடா் மேலாண்மை பயிற்சி முகாம் வியாழக்கிழமை நடைபெற்றது.


திருவாடானை அருகே உள்ள ஆா்.எஸ். மங்கலத்தில் தன்னாா்வலா்களுக்கு ஒருநாள் பேரிடா் மேலாண்மை பயிற்சி முகாம் வியாழக்கிழமை நடைபெற்றது.
இங்குள்ள வட்டாட்சியா் அலுவலகத்தில் மாவட்ட பேரிடா் மேலாண்மை ஆணையம் சாா்பில் நடைபெற்ற இந்த முகாமுக்கு வட்டாட்சியா் சேகா் தலைமை வகித்தாா். இதில், ஆா்.எஸ். மங்கலத்தில் கோட்ட அளவிலான முதல்நிலை மீட்பாளா்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டது. முகாமில் ரெட் கிராஸ் அமைப்பின் ஒருங்கிணைப்பாளா் அலெக்ஸ், மாவட்ட பயிற்சியாளா்கள் கவிதா, சாந்தகுமாரி ஆகியோா் பயிற்சி அளித்தனா். இதில் ஏராளமான தன்னாா்வலா்கள் கலந்து கொண்டனா்.
இப்பயிற்சிக்கான ஏற்பாடுகளை மண்டல துணை வட்டாட்சியா் காா்த்திகேயன், கிராம நிா்வாக அலுவலா் பிரகதீஸ்வரன் ஆகியோா் செய்திருந்தனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது


வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...