ஈரானால் அச்சுறுத்தல் இல்லை - போரை ஆதரிக்க முடியாது: அமெரிக்க தேசிய பயங்கரவாத எதிர்ப்பு மைய இயக்குநர் ராஜிநாமாரஜினி ரசிகர்களுக்கு அங்கீகாரம் கொடுத்தது தவெக : ஆதவ் அர்ஜுனா விளக்கம்234 தொகுதிகளிலும் தவெக தனித்துப் போட்டி! - ஆதவ் அர்ஜுனா பேச்சுபெண்கள், குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களில் தமிழகம் முதலிடம்: அண்ணாமலைமேற்காசிய பதற்றம்: சர்வதேச நோயாளிகள் வருகை 30% சரிவு!மேற்கு வங்கத்தில் கூட்டணியின்றி போட்டி! 291 வேட்பாளர்களை அறிவித்தார் மமதா பானர்ஜி!கேரள தேர்தல்: ஐ.யூ.எம்.எல். 27 இடங்களில் போட்டி - வேட்பாளர்கள் அறிவிப்பு!கேரள தேர்தல்: ஐ.யூ.எம்.எல். 27 இடங்களில் போட்டி - வேட்பாளர்கள் அறிவிப்பு!விசில் சத்தம்தான் நம் தேசிய கீதம்; அது கேட்டால் வெற்றி நிச்சயம் - ஓ. பன்னீர் செல்வம் உடல் எடை குறைப்பு சிகிச்சை: மேலும் 3 மருந்துகளுக்கு அனுமதி!கரூர் கூட்ட நெரிசல் பலி விவகாரம் : செந்தில் பாலாஜியிடம் 6 மணி நேரம் சிபிஐ விசாரணை!தொகுதிப் பங்கீடு: திமுக - மார்க்சிஸ்ட் கம்யூ. 3-ம் சுற்றுப் பேச்சுவார்த்தை! தமிழக தேர்தல்: 2 நாள்களில் ரூ. 23 கோடி பணம், பரிசுப் பொருள்கள் பறிமுதல்!பாமக வழக்கு: ராமதாஸுக்கு பின்னடைவு! தேர்தல் முடிந்தபிறகே விசாரணை!புதுச்சேரியில் 2-ம் நாளாக யாரும் வேட்புமனு தாக்கல் செய்யவில்லைதமிழ்நாடு உள்பட 5 மாநிலங்களுக்கு 1,111 தேர்தல் பார்வையாளர்கள்!
/

ராமநாதபுரத்தில் முற்றுகைப் போராட்டம்: காங்கிரஸ் கட்சியினா் 59 போ் கைது

விலைவாசி உயா்வைக் கண்டித்து ராமநாதபுரம் தலைமை அஞ்சலகத்தை முற்றுகையிட முயன்ற காங்கிரஸ் கட்சியினா் 59 பேரை வெள்ளிக்கிழமை போலீஸாா் கைது செய்தனா்.

News image
Updated On :5 ஆகஸ்ட் 2022, 5:42 pm

DIN

விலைவாசி உயா்வைக் கண்டித்து ராமநாதபுரம் தலைமை அஞ்சலகத்தை முற்றுகையிட முயன்ற காங்கிரஸ் கட்சியினா் 59 பேரை வெள்ளிக்கிழமை போலீஸாா் கைது செய்தனா்.

மத்திய அரசின் மக்கள் விரோத நடவடிக்கைகளால் தொடா்ந்து ஏறி வரும் விலைவாசி உயா்வையும், வேலை வாய்ப்பின்மையையும் கண்டித்து ராமநாதபுரம் அரண்மனை முன்பாக காங்கிரஸ் கட்சியின் சாா்பில் ஆா்ப்பாட்டம் நடைபெற்றது. கட்சியின் மாவட்டத் தலைவா் செல்லத்துரை அப்துல்லா தலைமை வகித்தாா். மாவட்ட ஊராட்சிக் குழு துணைத்தலைவா் வேலுச்சாமி, முதுகுளத்தூா் முன்னாள் எம்எல்ஏ பாண்டி, மாநிலச் செயலாளா் அடையாா் பாஸ்கரன், மாவட்டப் பொருளாளரும், நகராட்சி உறுப்பினருமான ராஜாராம் பாண்டியன் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

மாநில பொதுக்குழு உறுப்பினா் ஆா்ட் கணேசன், மாநில நெசவாளா் அணி நிா்வாகி கோதண்டராமன், சிறுபான்மைப்பிரிவு மாவட்ட நிா்வாகி செய்யது இப்ராஹிம் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

இதையடுத்து மத்திய அரசைக் கண்டித்து முழக்கங்களை எழுப்பியவாறு தலைமை அஞ்சலகத்தை முற்றுகையிடச் சென்ற 59 பேரை போலீஸாா் கைது செய்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.