ஈரானால் அச்சுறுத்தல் இல்லை - போரை ஆதரிக்க முடியாது: அமெரிக்க தேசிய பயங்கரவாத எதிர்ப்பு மைய இயக்குநர் ராஜிநாமாரஜினி ரசிகர்களுக்கு அங்கீகாரம் கொடுத்தது தவெக : ஆதவ் அர்ஜுனா விளக்கம்234 தொகுதிகளிலும் தவெக தனித்துப் போட்டி! - ஆதவ் அர்ஜுனா பேச்சுபெண்கள், குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களில் தமிழகம் முதலிடம்: அண்ணாமலைமேற்காசிய பதற்றம்: சர்வதேச நோயாளிகள் வருகை 30% சரிவு!மேற்கு வங்கத்தில் கூட்டணியின்றி போட்டி! 291 வேட்பாளர்களை அறிவித்தார் மமதா பானர்ஜி!கேரள தேர்தல்: ஐ.யூ.எம்.எல். 27 இடங்களில் போட்டி - வேட்பாளர்கள் அறிவிப்பு!கேரள தேர்தல்: ஐ.யூ.எம்.எல். 27 இடங்களில் போட்டி - வேட்பாளர்கள் அறிவிப்பு!விசில் சத்தம்தான் நம் தேசிய கீதம்; அது கேட்டால் வெற்றி நிச்சயம் - ஓ. பன்னீர் செல்வம் உடல் எடை குறைப்பு சிகிச்சை: மேலும் 3 மருந்துகளுக்கு அனுமதி!கரூர் கூட்ட நெரிசல் பலி விவகாரம் : செந்தில் பாலாஜியிடம் 6 மணி நேரம் சிபிஐ விசாரணை!தொகுதிப் பங்கீடு: திமுக - மார்க்சிஸ்ட் கம்யூ. 3-ம் சுற்றுப் பேச்சுவார்த்தை! தமிழக தேர்தல்: 2 நாள்களில் ரூ. 23 கோடி பணம், பரிசுப் பொருள்கள் பறிமுதல்!பாமக வழக்கு: ராமதாஸுக்கு பின்னடைவு! தேர்தல் முடிந்தபிறகே விசாரணை!புதுச்சேரியில் 2-ம் நாளாக யாரும் வேட்புமனு தாக்கல் செய்யவில்லைதமிழ்நாடு உள்பட 5 மாநிலங்களுக்கு 1,111 தேர்தல் பார்வையாளர்கள்!
/

சுதந்திரதின விழாவுக்குதயாராகும் ராமநாதபுரம் ஆயுதப்படை மைதானம்

 இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு சுதந்திரதின விழா நிகழ்ச்சிகள் நடக்கவிருப்பதால், ராமநாதபுரம் ஆயுதப்படை மைதானம் வியாழக்கிழமை தூய்மைப்படுத்தப்பட்டது.

News image
Updated On :11 ஆகஸ்ட் 2022, 6:50 pm

DIN

 இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு சுதந்திரதின விழா நிகழ்ச்சிகள் நடக்கவிருப்பதால், ராமநாதபுரம் ஆயுதப்படை மைதானம் வியாழக்கிழமை தூய்மைப்படுத்தப்பட்டது.

ராமநாதபுரம் மாவட்டத்தில் கடந்த 2 ஆண்டுகளாக சுதந்திரதினம், குடியரசு தின நிகழ்ச்சிகள் கரோனா பரவல் தடுப்பு நடவடிக்கையால் கடும் கட்டுப்பாடுகளுக்கு மத்தியில் நடத்தப்பட்டன. காவல்துறை அணிவகுப்பு முதல் கலை நிகழ்ச்சிகள் வரை கட்டுப்பாடுகளால் முழுமையாக நடத்தப்படவில்லை.

இந்நிலையில் ஆயுதப்படை மைதானத்தில் வரும் 15 ஆம் தேதி காலையில் 75 ஆவது சுதந்திரதின அமுதப் பெருவிழா நடைபெற உள்ளது. பள்ளி, கல்லூரி மாணவ, மாணவியரின் கலை நிகழ்ச்சிகள், கலை பண்பாட்டுத்துறையின் சாா்பில் சிலம்பம் போன்ற வீரவிளையாட்டு நிகழ்ச்சிகள் மற்றும் காவல்துறை அணிவகுப்பு போன்றவை நடத்தப்படவுள்ளன.

சுதந்திர தின கொடியேற்றம் மற்றும் கலை நிகழ்ச்சிகளையொட்டி ஆயுதப்படை மைதானத்தை தூய்மைப்படுத்தும் பணியும், அங்கு தாற்காலிக குடில்கள் அமைக்கும் பணியும் வியாழக்கிழமை தொடங்கின. முக்கிய விருந்தினா், பாா்வையாளா்கள் என நூற்றுக்கும் மேற்பட்டோா் அமரும் வகையில் தற்காலிக குடில்கள் அமைக்கப்பட்டுள்ளன. காவல்துறை அணிவகுப்புக்கான பாதைகள் புதுப்பிக்கப்பட்டுள்ளன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.