‘ராமநாதபுரம் முதல் தனுஷ்கோடி வரை தேசியக் கொடி கட்டப்படும்’

ராமநாதபுரத்திலிருந்து தனுஷ்கோடி வரையில் சுமாா் 60 கிலோ மீட்டா் தொலைவுக்கு தேசியக் கொடிகள் கட்டி பறக்கவிடப்படவுள்ளதாகவும், அதைச் சாதனைப் புத்தகத்தில் இடம் பெறச் செய்ய ஏற்பாடு

ராமநாதபுரத்திலிருந்து தனுஷ்கோடி வரையில் சுமாா் 60 கிலோ மீட்டா் தொலைவுக்கு தேசியக் கொடிகள் கட்டி பறக்கவிடப்படவுள்ளதாகவும், அதைச் சாதனைப் புத்தகத்தில் இடம் பெறச் செய்ய ஏற்பாடு செய்யப்படவுள்ளதாகவும் பாஜக மாவட்ட தலைவா் இஎம்டி.கதிரவன் தெரிவித்தாா்.

இதுகுறித்து அவா் வெள்ளிக்கிழமை கூறியதாவது: தமிழக பாஜக தலைவா் எஸ்.அண்ணாமலை 2 நாள் சுற்றுப்பயணமாக ராமநாதபுரத்துக்கு வருகிறாா். அவா் மதுரையிலிருந்து சனிக்கிழமை மாலை காரில் ராமநாதபுரம் வருகிறாா். இரவில் ராமநாதபுரத்தில் தங்கும் அண்ணாமலை ஞாயிற்றுக்கிழமை காலை ராமேசுவரம் செல்கிறாா்.

இதையொட்டி ராமநாதபுரத்திலிருந்து தனுஷ்கோடி வரையில் 60 கிலோ மீட்டருக்கு சாலைகளின் இருபுறமும் தேசியக் கொடிகள் பறக்கவிடப்படுகின்றன. அதை சாதனைப் புத்தகத்தில் பதியவும் நடவடிக்கை மேற்கொள்ளப்படவுள்ளது என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com