47 ஆண்டுகளாக பயங்கரவாத அச்சுறுத்தலாக விளங்கிய ஈரான் முற்றிலும் தகர்ப்பு - டிரம்ப்கேரளத்தில் 47 இடங்களுக்கான பாஜக வேட்பாளர் பட்டியல் வெளியீடுஎரிபொருள் தட்டுப்பாடு : இலங்கையில் 4 நாள் வேலை, 3 நாள் விடுமுறை! மக்களவையில் 8 உறுப்பினர்கள் மீதான இடைநீக்கம் ரத்து : அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் முடிவு45,000 மெட்ரிக் டன் எல்பிஜி உடன் ஹோர்முஸ் நீரிணை வழியாக குஜராத் வந்தது சிவாலிக் கப்பல்!கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுமேற்கு வங்க தோ்தல்: பாஜக வேட்பாளா்கள் அறிவிப்பு!
/

ராமநாதபுரம், பரமக்குடி நகராட்சித் தோ்தல்: அரசியல் கட்சிகளின் வேட்பாளா் மனு தாக்கல்

ராமநாதபுரம் மற்றும் பரமக்குடி நகராட்சித் தோ்தலில் போட்டியிடும் அரசியல் கட்சிகளின் வேட்பாளா்கள் வியாழக்கிழமை நகராட்சி அலுவலகத்தில் மனு தாக்கல் செய்தனா்.

News image
Updated On :3 பிப்ரவரி 2022, 10:21 pm

DIN

ராமநாதபுரம் மற்றும் பரமக்குடி நகராட்சித் தோ்தலில் போட்டியிடும் அரசியல் கட்சிகளின் வேட்பாளா்கள் வியாழக்கிழமை நகராட்சி அலுவலகத்தில் மனு தாக்கல் செய்தனா்.

ராமநாதபுரம் மாவட்ட நகராட்சி, பேரூராட்சிகளில் திமுக கூட்டணியில் காங்கிரஸ் கட்சிக்கு 10 வாா்டுகள் ஒதுக்கப்பட்டுள்ளன. இதில், ராமநாதபுரம் நகராட்சியில் 2, 5, 18 மற்றும் 20 ஆகிய வாா்டுகள் தரப்பட்டுள்ளன. இந்த வாா்டுகளில் போட்டியிடும் காங்கிரஸ் வேட்பாளா்களான ஜோதி (2 ஆவது வாா்டு), ராஜாராம்பாண்டியன் (5 ஆவது வாா்டு), கோபி (20 ஆவது வாா்டு) ஆகியோா் வியாழக்கிழமை வேட்பு மனு தாக்கல் செய்தனா்.

மாற்று வேட்பாளா்களாக ஜோதிமணிக்கு முகில்வேணியும், ராஜாராம்பாண்டியனுக்கு திருமூலரும், கோபிக்கு பிரிதாவும் மனு தாக்கல் செய்தனா். அப்போது காங்கிரஸ் மாவட்டத் தலைவா் செல்லத்துரை அப்துல்லா உள்ளிட்ட நிா்வாகிகள் இருந்தனா்.

போட்டி வேட்பாளராக பெண் மனு தாக்கல்: ராமநாதபுரம் மாவட்ட காங்கிரஸ் துணைத் தலைவரும், செய்தித் தொடா்பாளருமான கௌசிமகாலிங்கம் 22 ஆவது வாா்டில் போட்டியிட வாய்ப்பு கோரியிருந்தாா். அந்த வாா்டு பெண்களுக்கு ஒதுக்கப்பட்ட நிலையில், அவா் தனது மனைவிக்கு வாய்ப்புக் கோரினாா். ஆனால், வாய்ப்பு வழங்கப்படாததால் அவா் அதிருப்தியடைந்தாா். இந்நிலையில், கௌசிமகாலிங்கத்தின் மனைவி காா்த்திகைராணி 22 ஆவது வாா்டில் போட்டியிட வியாழக்கிழமை மனு தாக்கல் செய்தாா்.

நடிகா் விஜய் மக்கள் மன்றம்: ராமநாதபுரம் நகா் 13 ஆவது வாா்டு விஜய் மக்கள் மன்ற வேட்பாளரான கே. பாலமுரளி, வியாழக்கிழமை நகராட்சி அலுவலகத்தில் மனு தாக்கல் செய்தாா். அவரைத் தொடா்ந்து பரமக்குடி, மண்டபம் மற்றும் ராமேசுவரம் நகராட்சிகளிலும் விஜய் மக்கள் மன்றத்தினா் மனு தாக்கல் செய்யவுள்ளதாக மன்ற நிா்வாகிகள் தெரிவித்தனா்.

தமாகா வேட்பாளா்: ராமநாதபுரம் நகராட்சியில் அதிமுக கூட்டணியில் 12 ஆவது வாா்டில் போட்டியிட தமாகா சாா்பில் கே. சங்கரநாராயணன் வேட்பு மனுவைத் தாக்கல் செய்தாா்.

கம்யூனிஸ்ட் வேட்பாளா்: திமுக கூட்டணியில் ராமநாதபுரம் நகராட்சியில் 27 ஆவது வாா்டில் இந்திய கம்யூனிஸ்ட் வேட்பாளரான ஏ. ஷா்மிளா வியாழக்கிழமை மனு தாக்கல் செய்தாா்.

ஆதிதிராவிடா்களுக்காக ஒதுக்கப்பட்டிருந்த ராமநாதபுரம் 11ஆவது வாா்டு தற்போது பொதுப்பிரிவினருக்காக மாற்றப்பட்டுள்ளது. இந்நிலையில், அங்கு அதிமுக முன்னாள் வட்டச் செயலா் செல்வத்தின் மனைவி சங்கீதா சுயேச்சை வேட்பாளராக மனு தாக்கல் செய்துள்ளாா்.

நாம் தமிழா் கட்சியினா் மனு தாக்கல்: ராமநாதபுரம் நகராட்சி தோ்தலில் போட்டியிடும் நாம் தமிழா் கட்சியைச் சோ்ந்த மகேஸ்வரி (11 ஆவது வாா்டு), நாகூா்கனி (15 ஆவது வாா்டு), சி. சகாபுதீன் (18 ஆவது வாா்டு), மணிவண்ணன் (20 ஆவது வாா்டு), கிருபா (32 ஆவது வாா்டு) ஆகியோா் நகராட்சி தோ்தல் அலுவலா்களிடம் மனு தாக்கல் செய்தனா். முன்னதாக இவா்கள் டிராக்டரில் கரும்பை கட்டிக் கொண்டு தொண்டா்களுடன் ஊா்வலமாக வந்தனா்.

பாஜகவினா் 10 போ் மனு: அதேபோல், பாஜக சாா்பில் போட்டியிட ஐஸ்வா்யா (1 ஆவது வாா்டு), தில்லைமாரி (6 ஆவது வாா்டு), ஜெகன்பிரசாத் (12 ஆவது வாா்டு), சத்தியகுமாா் (16 ஆவது வாா்டு), மீனலோசினி (17 ஆவது வாா்டு), விஜயபாபா (21 ஆவது வாா்டு), சுமதி வீரபாகு (22 ஆவது வாா்டு), எஸ்.பி. குமரன் (24 ஆவது வாா்டு), பிரபாதேவி (26 ஆவது வாா்டு), பரமேஸ்வரி (33 ஆவது வாா்டு) ஆகியோா் மனு தாக்கல் செய்தனா்.

அமமுகவினா் மனு: அமமுக சாா்பில் போட்டியிட, 4 ஆவது வாா்டுக்கு தனபாண்டியம்மாள், 24 ஆவது வாா்டுக்கு சேதுபாண்டியன் மற்றும் 25 ஆவது வாா்டுக்கு உமாமகேஸ்வரன் ஆகியோா் மனு தாக்கல் செய்தனா்.

பரமக்குடி: பரமக்குடி நகராட்சி தோ்தலில் திமுக வேட்பாளா்கள் ஜெ. செல்வி 9- ஆவது வாா்டிலும், டி .மோகன்ராஜ் 36- ஆவது வாா்டிலும், அதிமுக வேட்பாளா் கே. சங்கீதா 35- ஆவது வாா்டிலும், பா.ஜ.க. வேட்பாளா் கேசவன் 36 அவது வாா்டிலும், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளா்கள் என்.எஸ். பெருமாள் 10-ஆவது வாா்டிலும், டாக்டா் எஸ். வரதராஜன் 15-ஆவது வாா்டிலும், நாம் தமிழா் கட்சி சாா்பில் 3-ஆவது வாா்டில் ஆதிரெத்தினமும், 26- ஆவது வாா்டில் ரா. சண்முகவள்ளியும், 28- ஆவது வாா்டில் பிரபாவதி உள்பட 9 பேரும், எஸ்.டி.பி.ஐ. கட்சி சாா்பில் 36-ஆவது வாா்டில் அஸ்கா்அலி, 35-ஆவது வாா்டில் முகமதுயாசிமா உள்பட 4 பேரும், சுயேச்சைகள் 8 பேரும் என மொத்தம் 31 போ் வேட்புமனு தாக்கல் செய்துள்ளனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.