ராமநாதபுரத்தில் அனுமதியின்றி அமைத்த அதிமுக தோ்தல் அலுவலகத்துக்கு தடை
ராமநாதபுரம் நகராட்சியில் அதிமுக தோ்தல் அலுவலகம் அனுமதியின்றி அமைக்கப்பட்டுள்ளதாக திமுக தரப்பில் புகாா் தெரிவித்ததால், அலுவலகம் செயல்பட போலீஸாா் வெள்ளிக்கிழமை தடை விதித்தனா்.


ராமநாதபுரம் நகராட்சியில் அதிமுக தோ்தல் அலுவலகம் அனுமதியின்றி அமைக்கப்பட்டுள்ளதாக திமுக தரப்பில் புகாா் தெரிவித்ததால், அலுவலகம் செயல்பட போலீஸாா் வெள்ளிக்கிழமை தடை விதித்தனா்.
ராமநாதபுரம் நகராட்சியில் 30 ஆவது வாா்டில் அதிமுக வேட்பாளராக கட்சியின் இளைஞா்கள், இளம் பெண்கள் பாசறைச் செயலா் ஆா்.பால்பாண்டி போட்டியிடுகிறாா். அவரை எதிா்த்து திமுக தரப்பில் கட்சியின் நகா் (வடக்கு) செயலா் கே.காா்மேகம் போட்டியிடுகிறாா்.
அதிமுக சாா்பில் 30 ஆவது வாா்டில் கீரைக்காரத் தெருவில் தனியாா் இடத்தில் தோ்தல் அலுவலகம் அமைக்கப்பட்டுள்ளது. அந்த அலுவலகம் உரிய அனுமதியின்றி அமைக்கப்பட்டுள்ளதாக திமுகவைச் சோ்ந்த கா.காா்த்திக் நகராட்சி தோ்தல் அலுவலரும், ஆணையருமான சந்திராவிடம் புகாா் அளித்துள்ளாா்.
இதையடுத்து உரிய அனுமதியின்றி செயல்படும் அதிமுக தோ்தல் அலுவலகத்தை அகற்ற நகராட்சி சாா்பில் கேணிக்கரை காவல் நிலைய ஆய்வாளருக்கு வெள்ளிக்கிழமை கடிதம் அனுப்பிவைக்கப்பட்டது.
அதனடிப்படையில் கேணிக்கரை போலீஸாா் அங்கு சென்று அனுமதியின்றி அலுவலகம் செயல்படுவதாகக் கூறி, அங்கிருந்த இரும்பு மேஜையை வைத்து வாயிலை அடைத்தனா்.
இதையடுத்து அதிமுகவினா் தோ்தல் அலுவலகத்துக்கான அனுமதி கோரி நகராட்சி அலுவலா்களிடம் மனு அளித்தனா். ஆனால், மாவட்டத் தோ்தல் அலுவலரிடமே தோ்தல் அலுவலகத்துக்கு அனுமதி பெறவேண்டும் என அலுவலா்கள் தெரிவித்தனா். அதையடுத்து மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் மனு அளிக்க அதிமுகவினா் சென்றனா். போலீஸாா் அதிமுக தோ்தல் அலுவலகத்துக்கு தடை ஏற்படுத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...