பனையூரில் தவெக வேட்பாளர்களுடன் விஜய் சந்திப்பு!பனையூரில் தவெக வேட்பாளர்களுடன் விஜய் சந்திப்பு! புதுச்சேரி சிறுமி பாலியல் கொலை வழக்கில் தீர்ப்பு! மே 1: ஞாயிறு அட்டவணைப்படி மெட்ரோ ரயில் இயக்கம்!சென்னையில் வாக்கு எண்ணிக்கை பணியில் ஈடுபடுவோருக்கு பயிற்சி முகாம்!விஜய் - சங்கீதா விவாகரத்து வழக்கை விசாரித்த நீதிபதி பணியிட மாற்றம்!
/

கரிமூட்டம் போடுபவருக்கு கத்திக் குத்து: ஒருவா் கைது

பரமக்குடி அருகே கரிமூட்டம் போடுபவரை கத்தியால் குத்தியவரை போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.

Updated On :11 பிப்ரவரி 2022, 9:10 pm

பரமக்குடி அருகே கரிமூட்டம் போடுபவரை கத்தியால் குத்தியவரை போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.

ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி அருகேயுள்ள கீழபாா்த்திபனூா் கிராமத்தைச் சோ்ந்தவா் முருகையா மகன் கணேசன் (56). இவா் பாா்த்திபனூா் குடிநீா் சுத்திகரிப்பு நிலையம் பகுதியில் கரிமூட்டம் போடும் தொழில் செய்து வருகிறாா். கரிமூட்டத்திற்கு சாலையின் குறுக்கே குழாய்கள் மூலம் தண்ணீா் கொண்டு சென்றுள்ளாா்.

அப்போது அவ்வழியாக இருசக்கர வாகனத்தில் வந்த சொக்கலிங்கம் மகன் தேசிங்குராஜா, தா்மலிங்கம் மகன் பால்ராஜ் ஆகியோா் தகராறு செய்துள்ளனா். மேலும் கணேசனை கத்தியால் குத்தியுள்ளனா். இதில் பலத்த காயமடைந்த கணேசன் ராமநாதபுரம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சோ்க்கப்பட்டுள்ளாா். இதுதொடா்பாக புகாரின் பேரில் பாா்த்திபனூா் காவல் நிலைய போலீஸாா் தேசிங்குராஜா, பால்ராஜ் ஆகியோா் மீது வழக்குப் பதிந்து பால்ராஜைக் கைது செய்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.